புராணங்கள் அடையாளம் காட்டிய பண்பின் சிகரங்கள்!

Oct 26, 2026,12:39 PM IST

- டி.கலைமணி


பண்பின் சிகரங்களாக பலரை நமக்கு புராணங்களும், வரலாறும் காட்டிச் சென்றுள்ளது. அவர்கள் யார் என்று பார்ப்போமா!


செஞ்சோற்று கடன் தீர்க்க தம்பிகள் என்று தெரிந்த பிறகும் அதே நிலையில் தொடர்வது - கர்ணன்.

தர்மத்தை காக்க சாரதியாகவும் - கண்ணன்.

கண்ணனும், இராமனும்  ஒருவரே என்று தெரிந்தாலும் என் பிரபு இராமர் மட்டுமே என்று பக்தி பிடிவாதமாக - ஹனுமன்


தாயின் வாக்கை காப்பாற்ற அதே பிரபுவை எதிர்த்தது ஹனுமன்.

வேடுவனும், விலங்கும் எனது தம்பிகள் என்று பாராபட்சம் காணாதிருப்பது - இராமன்.




தனது அண்ணணுக்காக தான் கட்டிய மனைவியை பிரிந்து 14 ஆண்டுகள் துயிலடையா நிலை மேற்கொண்டது - இலட்சுமணன்.

இந்த பாரதத்தை விட என் பரந்தாமனின் பாதச் சுவடுகளே எனக்கு முக்கியம் - பரதன்


தன் கணவன் காணாததை தானும் காண விரும்பாதது - காந்தாரி

பக்தியால் பிரபுவை எதிர்த்து நின்றவன் - ஹனுமன்

தன் அண்ணன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி வெளியேறியவன் - விபீஷணன்.


தன் அண்ணன் செய்வது தவறே ஆனாலும் இறுதிவரை உடன் நின்றவன் கும்பகர்ணன்.

நண்பனின் மனைவியினை அபகரித்து சென்றவனை தாக்கியவன் - ஜடாயூ. 


தன் மனைவியை அபகரித்து சென்றவன் தன்னை எதிர்த்து நிராயுதபாணியாக நிற்கும் பொழுது, இன்று போய் நாளை வா என்று  கூறியவன் - இராமன்.


தன்னை நூறுமுறை வஞ்சிக்க அனுமதி தந்தவன் - கண்ணன்.

பக்தனின் ஹரி நாராயண எனும் ஒரு குரலுக்கு ஓடோடி வந்தவன் - நரசிம்மன்.


அன்றைய Test Tube baby-  துரோணாச்சாரியார் .

அன்றைய incubator -கமண்டலம்.


வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் சீடன் மகாபலியை காப்பாற்ற முயற்சித்தார் சுக்ராச்சாரியார்.

கருவறையில் போர் அறிவு பெற்றவன் - அபிமன்யூ


வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் வாக்கை காப்பாற்ற தானம்  செய்தவன் - கர்ணன்

தன் மனைவியும் தன்  நண்பனும் பழகுவதை எள்ளளவும் சந்தேக நோக்கோடு பார்க்காதவன்- துரியோதனன் .


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி பக்தி, தத்துவம் என பல்சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விதைத்த கனவுகள் ஒருநாள் மலரும் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (8)

news

வாழ்க்கை நெறி!

news

புராணங்கள் அடையாளம் காட்டிய பண்பின் சிகரங்கள்!

news

கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)

news

Monday Thoughts: சிந்திக்க சில வரிகள் - அன்றும், இன்றும் நம் வாழ்க்கை - மகிழ்ச்சி எங்கே?!

news

மரங்கள்.. ஒரு நிமிடக் கதை (46)

news

தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?

news

வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்