- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்
மண்ணுக்குள் புதைந்த விதை,
மரமாகும் என்ற நம்பிக்கையில்…
மனதுக்குள் புதைந்த கனவு,
நனவாகும் என்ற எதிர்பார்ப்பில்…
விதைத்தவுடன் மலர்வதில்லை,
விதைகளின் வாழ்க்கை!
வலிகளைத் தாண்டாமல் கிடைப்பதில்லை,
வெற்றியின் முழுமையான மகிழ்ச்சி!
இன்று உன் உழைப்பை
உலகம் அறியாமல் போகலாம்!
உன் முயற்சியின் மதிப்பை
உறவுகளும் உணராமல் இருக்கலாம்!

ஆனால் நினைவில் கொள்…
மண்ணுக்குள் இருக்கும் விதைகூட,
தனக்கான நேரம் வரும்வரை
அமைதியாகத்தான் காத்திருக்கும்!
காத்திருப்பது தோல்வியல்ல,
கனவைக் கைவிடுவதும் வெற்றியல்ல!
தடைகள் வந்தாலும் தளராதே,
தாமதமானாலும் முயற்சியை நிறுத்தாதே!
பிறரின் வெற்றியைப் பார்த்து
உன் பயணத்தை நிறுத்தாதே!
ஒவ்வொரு பூவுக்கும் ஒரு காலம்,
ஒவ்வொரு கனவுக்கும் ஒரு நேரம்!
கண்ணீரால் நனைந்த நாட்களும்,
கவலையோடு கடந்த பொழுதுகளும்,
ஒருநாள் உன் வெற்றியைப் பார்த்து
புன்னகைக்கும் நினைவுகளாகும்!
இன்று விதைக்கும் உன் முயற்சி,
நாளை வெற்றியாக மலரட்டும்!
இன்று சுமக்கும் உன் வலிகள்,
நாளை வலிமையாக மாறட்டும்!
விதை மண்ணைப் பிளந்து வருவதுபோல்,
நீயும் தடைகளை உடைத்து எழு!
உன் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுத்து,
உன் இலக்கை நோக்கிப் பறந்து செல்!
கனவுகள் காண்பது மட்டும் போதாது,
வெற்றி தாமதமானாலும் பரவாயில்லை…
விதைத்த கனவுகள் ஒருநாள் மலரும்!
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)
இந்த உலகம் யாருடையது?
விதைத்த கனவுகள் ஒருநாள் மலரும் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (8)
வாழ்க்கை நெறி!
புராணங்கள் அடையாளம் காட்டிய பண்பின் சிகரங்கள்!
கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)
Monday Thoughts: சிந்திக்க சில வரிகள் - அன்றும், இன்றும் நம் வாழ்க்கை - மகிழ்ச்சி எங்கே?!
மரங்கள்.. ஒரு நிமிடக் கதை (46)
தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?
{{comments.comment}}