இந்த உலகம் யாருடையது?

Oct 26, 2026,02:18 PM IST

- வே.ஜெயந்தி


இந்த உலகம் உனக்குரியதா?

இல்லை, எனக்கு மட்டுமே உரியதா?

நம் அனைவருக்கும்

உரியதா?


‘நாம்’ என்ற உணர்வு

மறந்தே போனதே!

நாம் படும் பல துன்பங்களுக்குக்

காரணமானதே!


என் வீடு, உனக்கு உரிமை இல்லை!

எனக்குச் சொந்தமான இடத்தில்

யாருக்கும் இடமில்லை!




இது என் உலகம்!

நான் சொல்வதுதான் சட்டம்!

இது என் பள்ளி!

நான் நினைத்ததைத்தான் செய்வேன்!


மனிதா, ஒரு நிமிடம் யோசி!

நீ இவ்வுலகிற்கு வரும்போது

எதைக் கொண்டு வந்தாய்?

நீ இந்த உலகை விட்டுச் செல்லும்போது

எதைக் கொண்டு செல்வாய்?


ஒன்றுமில்லை!


ஏன் உனக்கு இந்தக் குணம்?

கொஞ்சம் மாற்றி யோசி!

பிறருக்கும் இடமளி!


அன்போடு வாழப் பழகு!

மனிதநேயம் மலரட்டும்!

சொர்க்கம் உன் காலடியில்!


(V. JAYANTHI , Graduate teacher, Creative  Writer, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்