- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோடு
அறுசுவை கலையின் அமுத அரசரே தாமு அய்யா
அகிலம் போற்றிய சாதனை நாயகரே தாமு ஐயா
சமையல் கலையினில் சரித்திரம் படைத்தீர்
சாதனை சிகரத்தில் தமிழ் கொடி நாட்டினீர்
தங்கள் கரங்கள் படைத்த உணவின் சுவையினிலே
தங்கள் புகழ் வாழும் உலகத்தின் நினைவினிலே
உழைப்பினை மூச்சாகக் கொண்டு உயர்ந்தவரே
உலகச் சாதனையால் புகழ்படைத்தவரே

சமையலை கலை என உலகிற்கு உணர்த்தியவரே
சாதனைப் பாதையில் பலருக்கு வழி காட்டியவரே
மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்று நிரூபித்தவரே
மூச்சு நிறுத்தி விண்ணுலகம் சென்று விட்டீரே
உங்கள் பிரிவு தந்தது ஆறாத் துயரத்தை
உங்கள் நினைவுத்தருமே அழியாத புகழை
உடல் தான் மறைந்தது உங்கள் புகழ் என்றும் மறையாது
உலகம் உள்ளளவும் உங்கள் பெயர் அழியாது
(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் ... மணிமா .. என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
உனக்கும் ஒரு இடம்!
என்னைக் கவர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி!
147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!
ஒரு துளி விஷம்
Prayer of Linganaickanahalli Students
அறுசுவை கலையின் அமுத அரசரே!
செஃப் தாமு அப்பா!
கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!
இந்த உலகம் யாருடையது?
{{comments.comment}}