- கவிஞர் பா. பானுமதி
ரவி சிங்கப்பூரில் தன் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டான். அவனது தாய் மட்டும் தமிழ்நாட்டில் இருக்கிறார். இந்த நிலையில், ரவியின் மாமா போன் பண்ணி வீடு நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ள ஒரு பார்ட்டி இருக்கிறது, உடனே வந்து செட்டில் செய்து விட்டு போகலாம் என்று கூற அவனும் விடுமுறை எடுத்துக் கொண்டு வேகமாக ஊருக்கு வந்தான்.
வீட்டில் அவன் அம்மா மட்டும் தான். அவ்வளவு பெரிய வீடு. அம்மாவுக்கு எதுக்கு.. விற்றுவிட்டு அந்த காசை தான் எடுத்துக் கொள்ளலாம். இத்தனை வருடமாக வாடகைக்கு விட்டு அந்த வாடகை வருமானம் அம்மாவிடம் இருக்கும். அதை ஒரு முதியோர் இல்லத்தில் கட்டி விட்டு அம்மாவை சேர்த்து விடலாம் என்று யோசனை செய்து கொண்டே வந்தான் .
வீட்டுக்கு வந்தால் அன்னை இல்லம் உங்களை வரவேற்கிறது என்ற போர்டு காணப்பட்டது. வீட்டுக்குள் அன்னையர் தின கொண்டாட்டம். மாடியில் வசித்து வரும் சந்திரன் தான் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தான்.

ஒன்றும் புரியவில்லை ரவிக்கு. அம்மாவிடம் வந்து பேசினான் ரவி. அப்போது அவனது தாயார், இந்த வீட்டை முதியோர் இல்லமாக மாற்றி விட்டேன். மேலிருக்கும் சந்திரன் தம்பி தரும் வாடகை, என்னுடைய செலவிற்கு சரியாக வருகிறது.
பிள்ளைகளின் ஆதரவு இல்லாத என் இரண்டு தோழிகளும் இங்கே தங்கி இருக்கிறார்கள். எங்களுடைய செலவிற்கு அந்த தொகை தேவைப்படும் போது சில உதவிகளையும் சந்திரன் தம்பி செய்கிறான். எனவே மாடி வீடு அவனுக்கு சொந்தம். கீழ் இருக்கும் இல்லம் என்னை போன்றவர்களுக்கு.
உணவிற்கு வழி செய்யாமல் நீ சென்று விட்டாய். நான் என்ன செய்வேன். நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு மட்டுமே தெரியும். அதனால் தான் இந்த யோசனை.
உனக்கும் ஒருவேளை என்னுடைய நிலை வந்தால், அப்போது உனக்கும் இங்கு ஒரு இடம் இருக்கும். நீ தாராளமாக வரலாம் என்று மகனிடம் சொல்ல ரவி அப்படியே உறைந்து போய் சிலையாகி நின்றான்.
(கவிஞர் பா. பானுமதி, மதுரையைச் சேர்ந்தவர். ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், சொற்பொழிவாளர்)
கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!
வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு
தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?
அகரத்தில் தொடங்கும் உலகம் - திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 1)
உனக்கும் ஒரு இடம்!
என்னைக் கவர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி!
147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!
ஒரு துளி விஷம்
{{comments.comment}}