ஒரு துளி விஷம்

Oct 26, 2026,03:22 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


துளி விஷம்

எனக்கு அமுதம்;

ஒன்றாகும், எனில் 

எனக்கு அதைத் தருவதில்

உனக்கு ஏன் பிணக்கு?


உன் கள்ள 

விழி பார்வையில்

கசியும் மது ; அது!


'மது' எதுவென அறிந்திலேன் நான்; இன்றுவரை !

உன் அதர புன்னகை எனத்

தெளிந்தேன் நான்; இன்று!

பவள வாய் சொல் ஒன்று

சிந்திடும் 'கள்' எனத் தெளிந்தேன்!




விஷத்தில் இத்தனை வகையிருக்க;

மிகையாக வேண்டாம்!

எனக்கு ஒரு துளி விஷமே போதும்!

விளம்பிடு!

அதை எனக்கு இப்போதே!


உயிர் பெற்று உயர்த்தெழுவேன்!

விஷம், அமுதாகும்

விந்தை ஒன்றைக் காண்பாய்!

நானும்!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்