- ராஜஸ்ரீ
அம்பத்தூரிலிருந்து தியாகராய நகருக்கு ( தி.நகர்) செல்லும் பேருந்து 147C . ஒரு நாள் அதில் அம்பத்தூரிலிருந்து சென்று கொண்டிருந்தேன்.
திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் எனது நண்பன் ஒருவன் ஏறினான். அவன் என்னைப் பார்த்து என்னடா ஸ்ரீநிவாசா, எங்கே போறே? என்று கேட்டான்.
நான் தி.நகருக்கு என்றேன். அவன் ஏதாவது உடைகள், பாத்திரங்கள் வாங்குவதற்கா? என்று கேட்டான். நான் இல்லை என்றேன்.
அவன் தெரிந்தவர்கள் வீட்டிற்கா? என்று கேட்டான். அதற்கும் இல்லை என்றேன். ஏதாவது கோவிலுக்கா? என்று கேட்டான். அதற்கும் இல்லை என்றேன்.
பிறகு அவன் நொந்து போய் அப்ப எதுக்குடா போறே? என்று கேட்டேன். நான் கூறினேன்.
இந்த பஸ் தி.நகர் போகுமான்னு நேர கண்காணிப்பாளர், டிரைவர், கண்டக்டர் எல்லோரையும் கேட்டேன். அனைவரும் போகும் என்றார்கள்.
அதைக்கேட்ட அவன் அதான் எல்லோரும் சொலிட்டாங்களே. அப்புறம் என்ன? என்றான்.

இவர்கள் கூறுவது இருக்கட்டும். வள்ளுவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
அவன் வள்ளுவர் காலத்துல ஏதுடா பஸ்? என்றான். நான் கொஞ்சம் பொறு. வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
"எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
அதனால் இவர்கள் கூறியதை கேட்டாலும் அதில் மெய்ப்பொருளை காண வேண்டும். அதாவது இந்த பேருந்து உண்மையிலேயே தி.நகர் போகிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்வதற்காகத்தான் நான் இதில் நான் போகிறேன். தி.நகர் வந்ததும் உடனே இதே பேருந்தில் திரும்பி வந்து விடுவேன் என்றேன்.
அதற்கு அவன் வள்ளுவரின் வழி நடக்கும் நண்பா, நீ நீடூழி வாழ்க என்று கிண்டலாக கூறினான். பிறகு நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. வருகிறேன் என்று கூறி இறங்கி விட்டான்.
இல்லை இல்லை. என்னிடமிருந்து தப்புவதற்காக இறங்கி விட்டான்.
(ராஜஸ்ரீயின் இயற்பெயர் வி.பி.ஸ்ரீநிவாசன். சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)
அகரத்தில் தொடங்கும் உலகம் - திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 1)
உனக்கும் ஒரு இடம்!
என்னைக் கவர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி!
147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!
ஒரு துளி விஷம்
Prayer of Linganaickanahalli Students
அறுசுவை கலையின் அமுத அரசரே!
செஃப் தாமு அப்பா!
கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!
{{comments.comment}}