- பசுங்கிளி
பாரம்பரியம் மணக்கும் கொங்கு நாட்டுச் சமையலறையில் ஏகப்பட்ட ஐட்டங்கள் இருக்குங்க. அதில் ஒன்றுதான் இந்த கச்சாயம்.
முன்னோர்கள் நமக்கு அளித்த பொக்கிஷங்களில் இந்த கச்சாயம் மிகவும் ஸ்பெஷல். வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்புறம் பஞ்சு போன்று மென்மையாகவும், எள்ளும் ஏலக்காயும் மணக்கத் தித்திக்கும் இந்தக் கச்சாயம், தீபாவளி போன்ற பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் நம் வீடுகளில் தவறாமல் இடம்பெறும் பாரம்பரிய பலகாரமாகும்.
கொங்கு நாட்டு ஸ்டைலில் கச்சாயம் செய்து சாப்பிடுவோமா.. இந்த தீபாவளிக்கு நீங்க இதையும் உங்க Todo லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க அப்படியே.
தேவையான பொருட்கள்

மைதா மாவு- 1/4 கிலோ
ரவை – 50 கிராம்
சர்க்கரை (சீனி) – 300 கிராம்
எள்ளு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 4 (பொடித்தது)
வாழைப்பழம் – 1 (மசித்தது)
மாவு சோடா – 2 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் ரவையைப் போட்டு, மிதமான சுடுநீரை ஊற்றி ஊற வைக்கவும். ரவை நன்றாக ஊறியதும், அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரை கரைந்தவுடன் மைதா மாவைக் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இதனுடன் பொடித்த ஏலக்காய், எள்ளு, மாவு சோடா, உப்பு மற்றும் மசித்து வைத்துள்ள வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
மாவு, இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும். ஒரு சிறிய கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கச்சாயம் இருபுறமும் பொன்நிறமாக வெந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.
எள்ளும் ஏலக்காயும் மணக்க, சுடச்சுடத் தித்திப்பான பாரம்பரிய கொங்கு நாட்டு கச்சாயம் இப்போது தயார்! மாலை நேரத் தேநீருடன் சுவைக்க இது ஒரு அருமையான பலகாரம்.
இன்னிக்கே கூட செஞ்சு பார்த்து சாப்பிட்டு விட்டு மறக்காம கமெண்ட்டையும் சொல்லிப் போட்டுப் போங்!
உனக்கும் ஒரு இடம்!
என்னைக் கவர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி!
147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!
ஒரு துளி விஷம்
Prayer of Linganaickanahalli Students
அறுசுவை கலையின் அமுத அரசரே!
செஃப் தாமு அப்பா!
கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!
இந்த உலகம் யாருடையது?
{{comments.comment}}