வாழ்க்கை நெறி!

Oct 26, 2026,12:45 PM IST

 - சிவசத்தியா, காரைக்குடி


லகரங்கள் பல முன்னோக்கிச் செல்ல வேண்டும் 

மாந்தர்கள் உணவை தெய்வமென்றும்

உணவிலிருந்து நிலத்தினையும்

பின் நீரினையும் 

பின் நெருப்பின் மதிப்பை உணர்ந்த

வெய்யோனையும்

வணங்கி பின் தலைமுறைகள் கடந்து காற்றினை உணர்ந்து

காற்றின் மூலத்துகளாக

விளங்கும் விண்ணை உணர  பல லகரம் ஆண்டுகள் 

கடந்து விட்டன 

சிந்திக்க சிந்திக்க அறிவு நுண்மை அடைந்தது




நல்ல முன்னோக்கிய சிந்தனையில்

அறிவைச் செலுத்தி

மறை பொருளை உணரும் நிலைக்கு

அறிவு உயர்ந்தது


இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 

காலம் படு  துரிதமானது


அறிவியல் முன்னேற்றத்திலும் 

நாகரிகத்தொழில்நுட்ப வளர்ச்சியாலும்

இயந்திர தனமாக

மாறிக் கொண்டே இருக்கிறோம் 


அலைபேசி நிழல் படக்காட்சிகள்

இயங்கலை ஆட்டங்கள்

நம் மூளையை முடமாக்கி கொண்டிருக்கிறது


நுகரும் இளைஞர்களை

பாலகன்கள்

உணர்வுகளை

தூண்டி  

மாந்தர்களின் வாழ்வை

துன்பத்தில் வருத்தி... 


தனக்கு   இன்பமாக்கி

சுகம் காண   கூம்புதல் பருவத்து குழந்தைகளை

பாலியல்  வன் கொடுமைகள்

செய்து களவு   உயிர்பலி

மானக்கேடுகள் செய்து 

சீரழித்தல் 

அனைத்து கரிசுகளும் தொடர் கதையாகவே தொடர்கிறது 


பொருள் புகழ் அதிகாரம்  புலனின்பம்

நான்கிலே உணர்ச்சிவயமான

பற்றுதலில் சிக்கிக்கொண்டு

எண்ணத்தையும்

செயலையும்

மாந்தர்கள் மனம்

தவறாக   ஆற்றிக்கொண்டு

பிறர்நலம் காத்தும்

பிற்கால நலன்கருதி

எண்ணவும்  செயல் புரியவும் முடிவதில்லை


வாழ்கையில்

கற்பனையான எண்ணங்களாலும்

தவறான

செயல்களாலும்

துன்பங்கள் விளைகின்றன 


அறியாமை கவனமின்மை 

உணர்ச்சிவயம்

குமுகாய  குற்ற அவலங்களுக்கு அடிப்படை


ஒவ்வொரு மாந்தனின் வாழ்விலும் நாளும்சிந்தனையை உயர்த்திக் கொண்டு

வாழ்வை வளப்படுத்திக் 


கொள்ளும் 

அறிவின்

தெளிவின் படியான

சிந்தனையாளர்களின்

ஆட்சி மாற்றமே! 

சட்டம் ஒழுங்கே! 


இயன்றவரை

தன் துன்பம் போக்கி கொண்டே

குமுகாய துன்பத்தைப் போக்கும்

உயர்ந்த வாழ்க்கை நெறியாம் நல்வழி

மாந்த குல வாழ்வுக்கு

ஆகூழாய்  அமையும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விதைத்த கனவுகள் ஒருநாள் மலரும் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (8)

news

வாழ்க்கை நெறி!

news

புராணங்கள் அடையாளம் காட்டிய பண்பின் சிகரங்கள்!

news

கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)

news

Monday Thoughts: சிந்திக்க சில வரிகள் - அன்றும், இன்றும் நம் வாழ்க்கை - மகிழ்ச்சி எங்கே?!

news

மரங்கள்.. ஒரு நிமிடக் கதை (46)

news

தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?

news

வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்