- சுதா திருநாராயணன், திருச்சி
ஜோக்கடிக்காம வாழ்க்கை சுவைக்காது மக்களே.. அதுக்கு நாங்க எங்க போறதுன்னு கேக்காதீங்க.. வீட்டிலேயேதான் குவிஞ்சு கிடக்கே.. அதுதாங்க கணவன் மனைவி ஜோக்ஸ்.. அவங்க கிட்ட கிடைக்காத ஜோக்கா.. அதைத்தான் தற்போது நம்ம சுதா திருநாராயணன் தட்டித் தூக்கி வந்திருக்கிறார்.. படிச்சுட்டு வயிறு வலிக்க சிரிங்க.
மனைவி: என்னங்க, இன்னிக்கு புதுமையா சமையல் செய்திருக்கேன். சாப்பிட்டு பாருங்க.
கணவன்:அப்படியா எதற்காக?
மனைவி: நளபாகம் வெப்சைட்டில் ஆன்லைன் சமையல் போட்டி, அதுக்காக .
கணவன்: என்ன செய்திருக்கே?
மனைவி: பூசணிக்காய் தோல் பருப்புசிலி, வாழைப்பூ மடல் வடை, பலாக்காய் தோல் பருப்பு குழம்பு, தேங்காய் கொட்டாங்குச்சியில் கூட்டு அப்படின்னு பண்ணி இருக்கேன்.
கணவன்: பரிசு உனக்கே கிடைக்கணும்னு நான் இன்னிக்கி விரதம் இருக்கேன்!!!!!!!!!
--

கணவர்: எதுக்குடி இப்ப என் கைய புடிச்சுண்டு இருக்கே?
மனைவி: எங்க நைஸா ஓட பாக்கறேள்? பத்திரிகையில ஆவி அனுபவத்தை எழுதச் சொன்னாளே. எனக்கு கொட்டாவியை தவிர வேற ஆவி தெரியாது !!
கணவர்: ஆனால் எனக்கு தினம் உன்னை பாக்கறப்போ (மைண்ட் வாய்ஸ்) ஆவியை பாக்கற மாதிரி பீதியா தான் இருக்கு.
மனைவி: என்னது? வாய் ஏதோ முணுமுணுக்கற மாதிரி இருக்கு?
கணவன்: இல்லடி, நீ ஏதோ சொல்லப் போறேன்னு காதைத் திறந்து வச்சுக்கறதுக்கு பதிலா வாயை ஆன்னு திறந்து வச்சுட்டேன். ஹிஹி சொல்லு சொல்லு !!
மனைவி: ஆவி பற்றி எழுதறத்துக்கு இல்லாததுனால, இட்லி, உப்புமா கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, டோக்ளா அப்படின்னு எல்லாம் நல்ல ஆவியில் வெந்த சமையல் பண்டங்களாக பண்ணி வச்சிருக்கேன். சாப்டுட்டு சொல்லுங்கோ. பத்திரிகைல நல்ல ஆவி ரெசிபியா எழுதணும். இன்னிக்கி சனிக்கிழமையோன்னோ.
கணவன்: இதுல நல்ல ஆவி கெட்ட ஆவி வேறயா ? விடு ஜூட்.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
{{comments.comment}}