- சசிகலா விஸ்வநாதன்
பொங்கிப் பெருகும் ஆற்றின் கரையோரம் ராமேசனின் விரல் பிடித்து நடந்து வந்த குழந்தை அதுலா; ' சட்' என்று நின்றாள். சாலையோரம் ஒற்றைக் கால் இல்லாத அழகான பொம்மையை ஒருவன், வைத்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
அதுலா அந்த பொம்மையை கையில் எடுத்துக் கொண்டு, சூம்பிய காலுடன் ஓட முடியாமல், "அப்பா ! இங்கே பாருங்க! அந்த மாமா இந்த பொம்மையை தனியே விட்டுட்டு போறாங்க. பாவம்! என்னை மாதிரியே அதுக்கும் ஒரு கால் மடங்கி நடக்க முடியாமல் இருக்கு." என்று சொல்லும் போதே, குழந்தை கண்ணில் நீர் தளும்பியது.
"அப்பா! நீங்களும் என்னை மரத்தடியில் விட்டுட்டுப் போயிடுவீங்களா?" என்று கேட்டதும்," நான் அதுலா குட்டியின் அப்பா, அப்படி ஒருக்காலும் செய்ய மாட்டேன்" என்று குழந்தையை நெஞ்சோடு தழுவிக் கொண்டான்.
"யாரும் இல்லாமல் பொம்மை தனியா இருக்கப் பயப்படாதா? நான் வேணா, இதுக்கு அம்மாவா இருக்கட்டுமா?" கேட்டாள்.
"வேண்டாம்! அதோட அம்மா வந்து தேடுவாங்க."
சொல்லி வாய் மூடவில்லை; ஒரு சிறுமி, ஓடி வந்து, பொம்மையை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டாள்.

அதுலா, "நீ தான் இந்த பொம்மையின் அம்மாவா?"
"ஆமாமாம்! இப்பத்திலிருந்து" என்றது வந்த குழந்தை.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
குயிலின் கூவலாய்!
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவரகாம் : அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த திட்டம்!
இரவும் பகலும் முதல் பூவாசம் வரை.. மறக்க முடியாத தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!
தீபாவளி கொண்டாட்டம்!
தீபாவளி பண்டிகை 2026: தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்; நாளை புக்கிங் தொடக்கம்
பொம்மையின் அம்மா!
நன்றியுடன்!
பத்தாண்டு கால பாசப் பயணம்!
AI-யிடம் ஆலோசனை கேட்கலாம் வாங்க!
{{comments.comment}}