Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
- ச.சித்ரா தேவி
சென்னை: தினசரி வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்த அளவுக்கு நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வாழைப்பழம் உதவுகிறது. அவ்வளவு நல்ல விஷயங்கள் அதில் உள்ளன.
நாம் தினமும் பயன் படுத்தும் வாழைப்பழத்தின் வகைகளும் அதன் பயன்களும் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எல்லா வாழைப்பழத்திலும் சத்து ஒன்றுதான். ஆனால் ஒவ்வொன்றும் ஒரு விதமான பலன் தரக் கூடியதாக உள்ளது. இதை எல்லோரும் அறிந்து கொண்டு பிறகு சாப்பிடுவது அவசியம்.
வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. வாழைப் பழம் குடலுக்கு நன்மை தரும். மூளையில் உள்ள திசுக்களின் செயல் திறனுக்கு ஊக்கம் அளிக்கிறது. செரடோனின் என்ற ரசாயன பொருள் சீராக சுரக்க உதவுகிறது.
விதம் விதமான வாழைப்பழங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதமானது.
ரஸ்தாளி பழம் நாவிற்கு சுவை தரும். நேந்திரம் பழம் தோலுக்கு மினுமினுப்பு பெற உதவும். செவ்வாழைப்பழம் உயிரணுக்களைப் பெருக்கும். பச்சை வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும். பேயன் பழம் குடலில் உள்ள நஞ்சை முறிக்கும்.
வாழைப் பழம் சாப்பிட்ட பிறகு மோர் குடிக்க கூடாது. நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை சீரகத்துடன் சேர்த்து பிசைந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் நீங்கும். நீரிழிவிற்கு பேயன்பழத்தொடு சீரகத்துடன் வெந்தயம் நெய் சேர்த்து சாப்பிட நீரிழிவு நீங்கும்.
இனிமேல் வாழைப்பழம் சாப்பிடும்போது இதையெல்லாம் நினைச்சுட்டே சாப்பிடுங்க.
(ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)