தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?

Dec 08, 2025,11:20 AM IST

- சுமதி சிவக்குமார்


தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. என்று ஒரு சினிமாப் பாடல் உண்டு. இதில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.. ஆனால் தென்னையைப் பற்றி சற்று ஆழ்ந்து பார்த்தால் அத்தனை நல்ல விஷயங்கள் அதில் உள்ளன. அதைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.


தென்னை மரம் நீண்ட கால பலன் கொடுக்கும் மரம் ஆகும். தென்னை மரத்தின் விதைக்கன்று 2அடி அல்லது 3 அடி உயரத்தில் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் 500 முதல் 600 கன்றுகள் நடலாம். வீடு என்றால், வீட்டின் தோட்டத்தில் இரண்டு அல்லது மூன்று கன்றுகள் நடலாம்.


தென்னை சுமார் 5 முதல் 6 வருடங்கள் வரை வளர்ந்து பூ பூக்கும். குட்டை மரங்கள் 2 வருடத்திலேயே பூப்பூக்கும்.  தென்னம்பாலை பூத்த பிறகு அதை தெய்வமாக எண்ணி வழிபாடு செய்வர். பூ பூத்த பிறகு 6 அல்லது 7 மாதங்களில் காய் பிடித்து இளநீராக கிடைக்கும். சுமார் ஒரு மரத்தில் 70 முதல் 100 காய்கள் கிடைக்கும். மரத்தின் ஊட்டச்சத்து பொருத்து அமையும்.


கொப்பரை தேங்காய்




தேங்காய் முற்றி காய்ந்த பிறகு அது கொப்பரை தேங்காய் எனப்படும். இதன் ஓடுகளை நீக்கி வெய்யிலில் உலர்த்தி செக்கில் ஆட்டி எண்ணெய் + புண்ணாக்கு தனியாகப் பிழிந்து எடுப்பர். இது உடல் சூட்டை தணிக்கும். உஷ்ணத்தை குறைக்கும். எனவே கை கால்களில் தேய்த்து வந்தால் நல்லது. இரவில் படுக்கும் முன் உள்ளங்காலில் தேய்த்தால் உடல்வலி குறையும்.


கேரளாவில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. மலையோர மாநிலம் என்பதால் அதிக தென்னை மகசூல் கிடைக்கும். மக்கள் சமையல் செய்ய கூட இங்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவர். தேங்காய் சமையலுக்கு மிக முக்கியமானதும் கூட. அவியல் கூட்டு மோர் குழம்பு இவற்றை தாளித்தால் சுவை அபாரமாக இருக்கும்.


தேங்காய் நார் கயிறு திரிக்கவும் காலடி தயாரிக்கவும் பயன்படுகிறது. தென்னை மட்டையை முடிந்து நம் தமிழர்கள் அடுப்பெரிக்கவும் பலவற்றிற்கும் பயன்படுத்தினார்கள்.


ஆயுட்காலம்


தென்னை மரம் நாட்டு மரம் சுமார் 80 முதல் 110 வருடங்கள் காய்க்கும். குட்டை மரம் 40 முதல் 50 வருடங்கள் காய்க்கும்.


நமது முன்னோர்கள் நட்டு வைத்த மரங்களின் பயனை நாம் அனுபவிக்கிறோம். அதேபோல நாம் நடும் மரங்கள் நம் வாரிசுகள் அனுபவிக்க வீட்டிற்கு ஒரு தென்னை நடுவோம்.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?

news

தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?

news

Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

news

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!

news

ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்