T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

Mar 08, 2026,08:55 PM IST
அகமதாபாத்: அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பல உலக சாதனைகளை முறியடித்துள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் என்பது இந்தியாவின் முக்கிய சாதனையாக இன்று அமைந்தது. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றிலேயே ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை இந்தியா இன்று படைத்துள்ளது. 

20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. இதற்கு முன்பு 2024-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா எடுத்த 176 ரன்களே சாதனையாக இருந்தது.

பவர்பிளேயில் அதிரடி சாதனையையும் இந்தியா செய்தது. ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணை, முதல் 6 ஓவர்களில் 92 ரன்கள் விளாசி புதிய உலக சாதனை படைத்தனர். இது எந்த ஒரு டி 20 உலகக்கோப்பை போட்டியிலும் எடுக்கப்பட்ட அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் ஆகும்.



தொடக்க வீரர்களின் சாதனை - அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது. இது ஒரு டி 20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப் ஆகும் (முந்தைய சாதனை: 48 ரன்கள், பாகிஸ்தான் - 2009).

தனி ஒரு வீரராக அதிக ரன்களை எடுத்த சாதனையையும் இந்தியா இன்று படைத்தது. சஞ்சு சாம்சன் 89 ரன்கள் எடுத்து, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைத் தன்வசப்படுத்தினார்.

இதுதவிர மேலும் சில அதிரடிகளையும் இன்று இந்தியா வெளிப்படுத்தியது. அபிஷேக் சர்மா இறுதிப்போட்டியில் வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் மேலும் சில சாதனைகளை அது படைக்கும்.. அதாவது தொடர்ச்சியாக இரண்டு முறை டி 20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைக்கும்.

அதேபோல டி 20 உலகக்கோப்பையைச் சொந்த மண்ணில் வென்ற முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா படைக்கும். அதையும் இந்தியா இன்று செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்