நிதானம்!

Su.tha Arivalagan
Mar 30, 2026,01:11 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


அழிக்க நினைக்காதே

ஆக்க‌ நினை


வார்த்தைகளைக் கொட்டாதே 


வாழ்த்துக்கள் வாங்க முயற்சி


பொறாமை வேண்டாம் 

பொறுமை கடைபிடி


கோபம் வேண்டாம் 

கொஞ்சம் தணி


ஆத்திரப்படாதே

அமைதி கொள்




ஒதுங்கி போகாதே

நிமிர்ந்து நில்


திருந்தவில்லை என்றால் 

தூரப் போ


நன்றி மறக்காதே

வந்த வழி திரும்பிப் பார்


இன்னா செய்தாலும் 

மன்னிக்கப் பழகு


குறைகுடம் கூத்தாடும் 

பயன்‌ ஒன்றும் இல்லை 


பதற்றப்படாதே யோசித்து முடிவெடு


எந்தவொரு இடத்திலும் 

நிதானம் நிம்மதி தரும்


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்)