மெல்லிய பூங்காற்று!

Mar 30, 2026,01:06 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


தென்றல் தாலாட்டில் தென்னங்கீற்றின் சல சலக்கும்

உரசல் கூட அழகான இன்னிசையாய்  தாளமிட  மெல்லியலாள்

எண்ணங்களும்

வெகுதூர தொடர் அலை போல் அவள் விழி முன்னே

நிழலாடியது. 


பூவிதா பெயரின் அழகை போல  அவளும் ஒரு மென்மையான  பூவின் இதழ் போலத்தான். 

ஆம்..... 


அவளும் ஒர் உதிர்க்கப்பட்ட பூவிதழ்...


இளமை கால ஓவியம் போல் உடலழகு. 

மழை மேகம் மிரட்டி வர

பள்ளி செல்லும் சாலையில் புத்தகத்தை அணைத்தபடி அவசர அவசரமாக நடந்து பள்ளி செல்லும் அவளை அணை போட்டு தடுப்பது போல்

மிக அருகில் வந்து நிற்கும் இருசக்கர வாகனத்தில் சிரித்தபடியே பார்த்து நின்றான் சதீஷ். 




என்ன என்பதுபோல் அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்து விட்டு

மேலும் வேகமாக நடந்து சென்றாள் பூவிதா. 


ஏய் உன்னை தான் பேசமாட்டியா....? 

என்ற சதீஷ் குரல் அவளுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. 


என்ன பேச வேண்டும்...? 

உன்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை.... 

வழி விடு  வகுப்பிற்கு நேரமாகி விட்டது. 


இதுவே வாடிக்கையாக

சென்றது

அவளது பள்ளிப்பருவம். 


காலேஜில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. 

அவனது தொல்லைகளும் தொடர்ந்து வந்தது. 


வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்தி விடுவார்கள். பயந்து போய் வெளியே செல்ல மறுத்து விட்டால்

என்ன செய்வது என தெரியாமல் அவனுடன் போராடி வந்தாள் பூவிதா. 


ஒரு சமயம் கெஞ்சினான்

இப்போது எல்லாம் அவன் மிரட்டும் தொனியில் பேசுகிறான். சே என்ன இது பெண்களின் நிலை. 


நிம்மதியாக வெளியில் சென்று தனக்கு பிடித்த படிப்பை தொடர முடியாமல் போகிறதே என கவலையுடன் நடந்து சென்றாள்... 


அவளுக்காக காத்திருப்பது போல் வாகனத்தை நிறுத்தி விட்டு அதன் மீது சாய்ந்த  நிலையில்

நின்றிருந்தான் சதீஷ்.


ஏய் என்ன உனக்காக நான் காத்திருப்பது தெரியலயா....? 

கவனிக்காமல் சென்றால் என்ன அர்த்தம்....? 


பிடிக்கலன்னு  அர்த்தம்

தெரியலயா....? 

என்றாள் பூவிதா. 


எனக்கு பிடிச்சிருக்கே

என்றான் அவன். 


இதோ பார்....! 

நான் படிக்க வேண்டும்

நிறைய கனவுகள் எனக்கு இருக்கு தயவு செய்து சிதைத்து விடாதே என கெஞ்சினாள் அவள். 


அவன் விடுவதாக தெரியவில்லை. 


அவள் கலங்கினாள்.  இரு கரங்களையும் குவித்து தயவு செய்து என்னை படிக்க விடு என்றாள். 


அவன் அவளது எந்த பேச்சையும் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. 


அவனது மிரட்டலுக்கு பயந்து கல்லூரிக்கு செல்லாமல்கண்களில் நீர் வழிய உதிர்க்கப்பட்ட இதழாக ஏங்கி நின்றாள்

பூவிதா.


(தொடரும்)


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்