அமைதியா இரு
Sep 23, 2026,12:01 PM IST
- பா. பானுமதி
குழப்பங்கள் தெளிவாகும்
விருப்பங்கள் நிறைவேறும்
ஆத்திரம் அமிழ்ந்து போகும்
பாத்திரம் நிரம்ப ஆகும்
நேத்திரம் தெளிவு பெறும்
தோத்திரம் தொடர்ந்து வரும்
ரத்த அழுத்தம் பயமுறுத்தாது
சக்கரை அளவு சதிராடாது
வேகம் விவேகமாகும்
சோகம் தூரம் போகும்
அலைகடல் கூட அமைதி கொடுக்கும்
மழை முகில் கூட மகிழ்ச்சி கொடுக்கும்
நிதானம் நிறைந்து வழியும்
சமாதானம் சங்கமிக்கும்
அமைதியால் அனைத்தும் ஆகும்
அமைதியில் அல்லாதன வேகும்
அமைதியே அச்சம் அகற்றும்
அமைதியே ஆற்றல் சுரக்கும்
அமைதியாக இருந்து பார் வழி பிறக்கும்
அமைதியாக இருந்து வாழ் ஆனந்தம் கிடைக்கும்
அமைதியே அனைத்துக்கும் அடிப்படை
ஓம் சாந்தி ஓம் சாந்தி
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)