விழுந்தாலும் விலகி விடாதே!

Su.tha Arivalagan
Sep 18, 2026,01:54 PM IST

- பா. பானுமதி


சமநிலை தோன்றி விட்டால்

சறுக்கல்கள் வராது 

சங்கடங்கள் ஏறாது  

சரியா இல்லையா என்ற குழப்பம் வராது 


வழக்கியும் விழாது 

தடுக்கியும் கெடாது

ஏற்றத்தாழ்வு ஏற்படாது 

சண்டைகள் தோன்றாது


சலிப்பும் அலுப்பும் வராது  

சமநிலையே என்றும் சரியானது 




சகலத்துக்கும் முறையானது


ஆம்...


விழுந்தாலும் விலகி விடாதே 

தோல்விகள் தொடர்ந்தாலும் துவண்டு விடாதே 


வெற்றிக்கனி மறைந்தாலும் மனம் விடாதே 

முயற்சிகள் தடையானாலும் முடங்கி விடாதே 


பயிற்சிகள் பழக்கம் இல்லாவிட்டாலும் பழக மறக்காதே

வினாக்கள் வீழ்த்தினாலும் விழுந்து விடாதே 


கனாக்கள் அழுத்தினாலும் கரைந்து விடாதே 

தடைகள் தகர்த்தாலும் தளர்ந்து விடாதே

கடைகள் பல விரித்தாலும் கலங்கி விடாதே 


இலக்கை எட்டும் வரை இயக்கம் விடாதே  

இலக்கை எட்டியபின் மயங்கி விடாதே 

ஒரு நாள் மாறும் திருநாளாகும் 

ஓயாமல் ஓடிக் கொண்டிரு!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)