நேயம் நெருக்கடியிலா!

Su.tha Arivalagan
Oct 02, 2026,04:56 PM IST

- பா. பானுமதி


காகம் கரைந்தபடி சுத்தி சுத்தி வந்தது

மயில் அகவி தன் வருகையை சொன்னது 


குயில் கூவியப்படியே கொண்டாட முனைந்தது 

கிளியும் கீச்சு குரலில் பேசிய படியே பறந்தது 


அணில் ஆர்ப்பாட்டமாய் அங்கும் இங்கும் அலைந்தது 

சிட்டுக்குருவியும் சிறகடித்து சிந்தித்தது போல 


தேன் சிட்டும் தேடிக் கொண்டே இருந்தது 

பறவைகளும் விலங்குகளும் வரவை எதிர்பார்த்தபடி 

சப்தமிட்டு கொண்டிருந்தன 




மீனாவின் வாசலில் தினமும் உணவிட்டு மகிழ்பவள் காணோமே என்று...

மணம் ஆகி மாநகருக்கு சென்று விட்ட மீனா அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களை தேடிக் கொண்டிருந்தாள்...


குயிலையும் மயிலையும் காணாமல் தவித்தாள். அணில்களும் சிட்டுக்குருவியும் இல்லாமல் அனாதையாய் உணர்ந்தாள் .


காகத்திற்காவது உணவிடலாம் என்று வெளியே வந்தால், வீட்டிலும் வெளியிலும் குடியிருப்பு வாசிகள் நிறைய இருந்தாலும் கண்டும் காணாதது போல் செல்வது கண்டு திகைத்தாள். காரணம் தெரியாமல் கலங்கினாள் .


மொட்டை மாடியில் உணவு வைத்தாலும் காகத்தையும் காணும் அங்கு நேசத்தையும் காணும் என்றாலும் தவறாமல் உணவு வைத்தாள் .


ஒரு நாள் காகங்களும் வரும் மனித மனங்களில் மனித நேயமும் வளரும் என்று நம்பிக்கையில்...!


(பா.பானுமதி, கவிஞர், ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், மதுரை)