தெரியுமா...?
Mar 17, 2026,01:28 PM IST
- பா.பானுமதி
காசு தேடி கடல் கடந்து சென்ற கணவா...
கண்ணீர் கதை தெரியுமா...
விடியலுக்கு தெளிவிருந்தால் வேதனை விளக்கி இருக்கும்
நிலவுக்கு தினைவு இருந்தால் நிலையை சொல்லி இருக்கும
வானவில்லுக்கு வாய் இருந்தால் வருத்தம் விளம்பி இருக்கும்
இடிக்கு தெம்பு இருந்தால் இயலாமை இயம்பி இருக்கும்
மின்னலுக்கு மனமிருந்தால் மாற்றம் காட்டி இருக்கும்
திருக்கு கனிவிருந்தால் கவலை கரைத்து இருக்கும்
அலைக்கு மொழி இருந்தால் அவலம் சொல்லி இருக்கும்
மின்னஞ்சலில் என்னஞ்சல் சென்று சேரவில்லையே
வாட்ஸாப்பில் என்ஆப் ஆப்பானதே
டிவிட்டரில் என் ஸ்டிக்கர் மக்கர் பண்ணுதோ
பேஸ்புக்கில் என் பேஸ் மிஸ்ஸானதோ
அலைவரிசைகள் என் நிலைவரிசை கலைத்ததோ
வீடியோ கால் வேலை செய்ய வில்லையோ...
இணையம் என் வாழ்வில் பிணையம்...
இருமனம் எப்போது இணையும்...!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)