தேவை!

Su.tha Arivalagan
Sep 17, 2026,02:54 PM IST

- பா. பானுமதி


பூமியை தோண்டி தேடினாலும் தெரியவில்லை 

வானில் பறந்து பார்த்தாலும் கிடைக்கவில்லை


அக்கம் பக்கம் அலைந்து திரிந்தும் அமையவில்லை 

கண்கள் தேட கால்கள் ஓட கைகூடவில்லை 


மண்டியிட்டு அழைத்தாலும் மகிழ்வில்லை 

தாண்டி விட்டு சென்றாலும் திகழவில்லை


நட்பிலும் காதலிலும் மிளிரவில்லை 

வீட்டிலும் வெளியிலும் மலரவில்லை 




பகலிலும் இரவிலும் ஒளிர வில்லை

பார்த்து பார்த்து நின்றாலும் படியவில்லை 


இறுக்கிப்பிடித்தாலும் இளகவில்லை 

இசைவாய் இருந்தாலும் ஒழுகவில்லை


இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ...

உன் தேவை என்ன உனக்குள் தேடு 

உனக்குள் உருவாகும் வெளிச்சக்கோடு


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)