பெண்கள் அன்றும், இன்றும், என்றும்!

Sep 17, 2026,02:49 PM IST

- கா.சா. ஷர்மிளா


அஜந்தா ஓவியமாக நின்றாள் அன்று...!

ஓவியக் கலைகளிலேயே உலக நாயகியாக நின்றாள் இன்றும், என்றும்...!


பெண்மை  பெண்களுக்கு இறைவன் அளித்த நிகரற்ற நன்கொடை...!


பெண்மையில்லை என்றால்...!

எல்லா பெண்களும் ஆண்களே என்றனர் அன்று...!


ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் பெண்கள் இன்றும், என்றும்...!

அடுப்பூதும்  பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று எட்டா கனியாக கல்வி இருந்தது அன்று...!

பட்டித்தொட்டி எங்கிலும் பெண்கள் பட்டங்களை ஆளவும் சட்டங்களை செய்யவும் செய்தனர்  இன்றும், என்றும்...!




தலை குனிந்து நின்றாள் அன்று...!

தலை நிமிர்ந்து நின்றாள் எல்லா துறைகளிலும் இன்றும்,என்றும்,,!


கண்ணே கண்மணியே பொன்மணியே என்றனர் அன்று...!

கணினிஅமைப்பாளரே, விஞ்ஞானியரே, என்றனர் இன்றும், என்றும்...! 


பெண்கள் வீட்டில் பூச்சிகளாக அன்று..!


நாட்டை ஆளப் பிறந்தவர்களாக,

ஏவுகணை நாயகிகளாக இன்றும், என்றும்...!  


(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்