- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 20 26 செப்டம்பர் மாதம் 18ம் தேதி வெள்ளிக்கிழமை புரட்டாசி மாதம் பிறக்கிறது. தமிழ் மாதங்களில் பெருமாளுக்கு உரிய மாதமாக, மிகவும் புனிதமான மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகின்றது. இம்மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று விரதம் இருந்து பெருமாள் தரிசனம் செய்வதை முன்னோர்கள் காலம் முதல் இன்று வரை காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம்.
இதில் புரட்டாசி மாதம் பிறந்து விட்டது என்று அசைவப் பிரியர்களுக்கு மிகவும் வருத்தமாகத் தான் இருக்கும். மற்ற தமிழ் மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், புரட்டாசி மாதம் முழுவதும் அசைவத்தை தவிர்த்து, விரதம் இருக்கும் வழக்கம் உள்ளது தானே நண்பர்களே. அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நம் பெரியவர்கள் கூறுவதற்கு காரணம் ஆன்மிகமா? அறிவியலா? என்பதற்கான சிறு தகவல்களை பற்றி அறிந்து கொள்வோம்.
ஆன்மீகக் காரணம்
வருடத்தில் 12 மாதங்கள் இருப்பினும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் மட்டும் அசைவம் தவிர்ப்பார்கள். ஏனெனில் புரட்டாசி மாதம் என்பது மழைக்காலம் முடிந்து தட்பவெட்ப நிலை மாறத் தொடங்கும் காலமாக உள்ளது. இம்மாதம் மகாவிஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். எனவே, விஷ்ணுவின் அருளைப் பெறவும், தூய்மை பேணவும் மக்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். ஜோதிட ரீதியாகவும் புரட்டாசி மாதத்தின் அதிபதி புதன் கிரகம் ஆகும்.

புதன் பகவான் மகாவிஷ்ணுவின் ஸ்வரூபமாகவும், சைவத்திற்கு உரிய கிரகமாகவும் கருதப்படுவதால் இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுகிறது. இந்த புனிதமான மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை தரிசித்து, உடலையும் மனதையும் தூய்மையாக வைத்து பக்தியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர்.
அறிவியல் காரணங்கள்
பூமியில் இருந்து வெளிப்படும் வெப்பம்:

வெயில் காலத்தில் சூடாகி இருந்த பூமி இம்மாதத்தில் மழை பெய்யும் பொழுது அந்த நீரை ஈர்த்து அதன் உள்ளே இருந்த சூட்டை மெல்ல மெல்ல வெளியேற்ற தொடங்கும். இந்த வெப்பம் வெயில் கால அக்னி நட்சத்திர வெப்பத்தை விட உடலுக்கு கெடுதல் தரக்கூடியதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் அசைவ உணவுகள் சாப்பிடுவது உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து உடல் நல கோளாறுகள் காரணமாக, அதிக இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல், வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
நோய் தொற்று ஏற்படும் அபாயம்:
மழைக்காலம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காலங்களில் சுற்றுப்புறத்தில் நோய்க் கிருமிகள் மற்றும் நீரின் மூலம் பரவும் நோய் தொற்றுகள் மிகவும் அதிகரிக்கும்.இந்தச் சூழலில் அசைவ உணவுகளை உட்கொள்வது அதன் மூலமாக நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க கூடும். அசைவ உணவுகளைத் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
உயிரினங்களின் இனப்பெருக்க காலம் :
பல விலங்குகள், மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு இந்த காலகட்டம் இனப்பெருக்க காலமாக இருக்கும். சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் இந்த காலத்தில் அசைவ உணவுகளை உண்பதை தவிர்ப்பது நல்லது என்று கருதப்படுகிறது.
அஜீரண கோளாறுகள் :
மழைக்காலத்தில் ஈரப்பதமான வானிலை உடலின் அமைப்பை மெதுவாக்கி உடலை மந்தமாக்குகிறது. எனவே, இக்காலகட்டத்தில் அசைவ உணவுகள் குறிப்பாக,சிவப்பு இறைச்சி செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் மற்றும் உடலுக்கு சற்று கனமாக இருக்கும். செரிமான சக்தியும் குறைந்து இருக்கும். இதன் காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
எனவே,புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, பெருமாளை நினைத்து விரதம் இருந்து கோவில்களுக்குச் சென்று அங்கு தீர்த்தமாக தரும் துளசி நீரை குடிப்பதனால் உடலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அடைகிறது. நம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை விளைவிக்கும் சைவ உணவுகளை உண்டு, துளசி தீர்த்தத்தை அருந்தி நம்மை பாதுகாக்க வேண்டும் என்று மூதாதையர்கள் அன்றே கூறியுள்ளனர்..
வரும் வெள்ளிக்கிழமை புரட்டாசி 1ஆம் தேதி முதல் கோழி,ஆடு,மீன் ஆகியவை புரட்டாசி மாதத்தில் உயிர் பிழைத்தோம் என்று மிகவும் குஷியாக ஆட்டம் போடுவதை ஏஐ (AI) மூலம் நிறைய ரீல்ஸ்கள் வருவதை நாம் சுவாரஸ்யமாக ரசிக்கலாமே...
வாழ்வில் நாம் கடைபிடிக்கும் ஒவ்வொரு வழக்கத்திற்கும், பழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு இல்லையா?
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
If you want to be successful do this first!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
செப்.19-ல் திமுக முப்பெரும் விழா நடைபெறும்: கட்சி தலைமை அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: தவெக, திமுக வேட்புமனுக்கள் ஏற்பு
{{comments.comment}}