மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ...!

Su.tha Arivalagan
Oct 12, 2026,02:55 PM IST

- பா. பானுமதி


மாதவன் ஒருவேலை தேடும் பட்டதாரி. மாதவனுடைய தந்தை தொழிலில் நஷ்டம் அடைந்து அந்த அதிர்ச்சியில் படுக்க படுக்கையாகி விட்டார். அவருடைய தாயாரும் நடைபிணமாக மாறிவிட குடும்ப சுமை அழுத்தியது.


மாதவா என்னுடன் சற்று கோவிலுக்கு வா என்று அவனை அழைத்துச் சென்றாள் அப்பத்தா. உனக்கு பிடித்த வேலை எப்போது கிடைக்கும், தெரியவில்லை. உன் பெற்றோர் இப்படி இருக்க ஒவ்வொரு நாளும் சிரமமாக இருக்கிறது. எனவே நாளை முதல் நம் தெருவில் உள்ள 10 வீடுகளுக்கு இட்டிலிகள் சுட்டு தரலாம் என்று நினைக்கிறேன்.


அதற்காக அவர்களிடம் பேசி விட்டேன். இப்போது நீ கடைக்கு சென்று இந்த லிஸ்ட்டில் உள்ள பொருட்களை மட்டும் வாங்கி வா. நாளைக்கு நான் செய்து தரும் இட்லிகளை காலையில் அவர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்துவிடு. இந்த உதவியை மட்டும் எனக்கு செய் என்று கூறினார்.


உன் தாத்தா இல்லாமல் இந்த  இட்லி கடை போட்டு தான் உன் தந்தையை படிக்க வைத்து ஆளாக்கினேன் என்று கூற மாதவனும் வேறு வழி இல்லாமல் சரி என்று தலை ஆட்டி வைத்தான் மாதவன்.




பாட்டி ஆனால் உன் ஒருத்தியால் சட்டினி சாம்பார் எல்லாம் செய்ய முடியாது என்று சொல்ல, இட்டிலி மட்டும்தான். அதை எல்லாரிடமும் பேசி விட்டேன் என்றாள் பாட்டி.


மறுநாள் முதல் 100 இட்டிலியில் தொடங்கி வேகமாக வியாபாரம் நடந்தது. இப்படியே ஒரு வருடம் செல்ல ஒரு லட்சம் இட்லிகள் தயாராகி அந்த ஏரியாவிற்கு விநியோகம் நடந்து கொண்டிருந்தது .


மாதவனுக்கும் வேலைக்கான நேர்காணல் வர நீ வேலைக்கு போகலாம்  என்று பாட்டி கூறினார். 20 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் நான் 200 பேருக்கு கொடுக்க வேண்டாமா. நான் வேலைக்கு போகத்தான் வேண்டுமா என்று கேட்டான் மாதவன்..!


மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் தானே!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், சொற்பொழிவாளர். மதுரையைச் சேர்ந்தவர்)