எல்லாமே இருக்கு ஆனா!
- பா. பானுமதி
லதா நல்ல திறமையான பெண் கடை தெருவில் சேலை கடை வைத்திருக்கிறாள். இப்போது தீபாவளி வந்து விட்டது அல்லவா. அதனால் சேலைகளுடன் சேர்த்து பெண் குழந்தைகளுக்கான ரெடிமேடு ஆடைகள் பிளவுஸ் பிட்டுகள் லைனிங் பிளவுஸ் என்று கடையை சற்று விரிவாக்கி விட்டாள். அதனால் என்ன நல்லது தானே. தீபாவளி இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன வியாபாரம் முன்பே ஆரம்பித்து விட்டது. லீவு நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. கடை தெருவில் தன்னுடைய கடையிலும் நன்றாகவே வியாபாரம் நடக்கிறது.
காலை 9 மணிக்கு கடையை திறந்தால் மதிய சாப்பாடு கொண்டு வந்து விடுவாள். சாப்பிட மூன்று மணி ஆகிவிடும். இரண்டு பெண்கள் வேலைக்கு இருக்கிறார்கள். வேலை முடித்து வீட்டுக்கு போக ஒன்பது மணிக்கு மேல ஆகிவிடுகிறது.
இன்று இன்னும் நேரம் கூடுதலாக ஆகிவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளுகிறது. வழியில் ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என்றால் எல்லா கடைகளிலும் கூட்டம். எனவே வீட்டுக்கு போனால் ஃப்ரிட்ஜில் மாவு இருக்கிறது. காலையில் செய்த சட்னி இருக்கிறது. வேறு ஏதேனும் செய்து கொள்ள வேண்டுமானால் தேவையான அனைத்து பொருட்களும் வீட்டில் இருக்கிறது. சமையலறையில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனாலும் வீட்டுக்கு சென்று சமைக்க முடியுமா என்று ஒரு வேலை செய்தாள்.
அதன்படி வீட்டுக்குச் சென்றவுடன் சாப்பிட ஆரம்பித்தார். எல்லா வசதிகள் இருந்தும் தேவையானவை எல்லாம் இருந்தும் நேரமில்லையே. அதனால் வரும் வழியில் உணவை ஆர்டர் செய்து விட்டாள். அதை தான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டாள். இன்றைய சூழ்நிலை இப்படியாகிவிட்டது.
எல்லாம் இருந்தாலும் முக்கியமாக நேரம் இருக்க வேண்டும் அல்லவா....!
(பா.பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், மதுரை)