காமுகர்களை கடந்து கற்புடன் நடப்பதே.. சாதனை!

Su.tha Arivalagan
Jul 07, 2026,01:15 PM IST

- பாரத்


அனைத்து கட்சி கொடிகள் 

உயர பறக்கும் நாடு 

அன்றாடங் காய்ச்சி  என்று 

ஏழைக்கு இங்கு பேரு 


சாதி மத சண்டைகள் 

தெருக்கூத்தாகும் 

பெண்ணுரிமை போராட்டம் 

வெறும் வாய்ப்பேச்சாகும் 




தேநீர் கடை மேசை தான் 

கட்சித் தலைவனை உருவாக்கும் 

தேசத் தந்தை காகிதம் 

பாமர மக்களை விலை கேட்கும் 


குன்றிய கிழவியும் 

பள்ளி சிறுமியும் 

பாலின்பத்திற்கு இரையாவது 

தேசத்தின் வேதனையாகும்


பாரத தாயும் இங்கு 

காமுகர்களை கடந்து 

கற்புடன்  நடப்பதே

என் நாட்டின் சாதனையாகும்