என்னுள் எழுந்த (தீ)!
- கலைவாணி ராமு
பாரதீ
பாட்டுக்கு ஒரு தலைவன் எங்களின் முண்டாசுக் கவி பாரதியின் கவிதைகளை படித்தாலே பார் போற்றும்படி தரனியில் வாழலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை மாறுவேடம் என்றாலே எங்களின் மீசைக்காரனின் உருவம் தரித்து, வீர முழக்கம் இடுவார்கள்.
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே,உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே. மனதை உறுதி படுத்த ,பெண்கள் வீரமாக வெற்றி நடை போட, என் கவிஞன் மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும், எனவும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் என்றும் பாடியுள்ளாரே.
எட்டையபுரத்து அரசன் எட்டாக் கனியாய் இருந்த சுதந்திர உணர்வை கவிதை நயத்துடன் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்நாடே. வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ .என்ற கவிதை வரிகள் சுதந்திர தாகத்தை உணர்த்தும். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என பாடல்கள் ஏராளம்..
சாதி வேற்றுமையை ஒழிக்க வெள்ளை நிறத்தில் ஒரு பூனை என்ற வரிகள். பாஞ்சாலி சபதம் தேவி, திரௌபதி சொல்வாள் ஓம் தேவி பராசக்தி ஆனையுரைத்தேன் என்ற வரிகள் அனைத்தும் பசுமரத்து ஆனி போல் என்றென்றும் காலத்தால் அழியா வரிகள்.
பாரதி வெறும் கவிஞன் மட்டுமல்ல.. ஒரு தீ.. வெளியில் உழலும் தீ அல்ல.. நமக்குள், உள்ளுக்குள் சுழலும் பெரு நெருப்புதான் பாரதி.
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)