144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

Dec 11, 2025,02:12 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மகாகவி பாரதியார் 144 வது பிறந்தநாள் இன்று!


தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி, 1882 ஆம் ஆண்டு சின்னசுவாமி சுப்ரமணிய பாரதி எனும் இயற்பெயர் கொண்ட பாரதியார் பிறந்தார். பாரதி மறைந்தாலும் அவருடைய எழுத்துக்களால் என்றும் நம் மனதில் நீங்கா இடம் பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாகவி இவர். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.


இன்று டெல்லியில் மதியம் ஒரு மணி அளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகாகவி பாரதியின் படைப்புகளின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.  பாரதியின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு சென்றதும் இந்த ஜதி பல்லுக்கு, அவருக்கு மரியாதை செலுத்தப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.


முதல்வர் மு.க.ஸ்டாலினும் புது நெறி காட்டிய புலவன் தமிழ் கவியில் தனித்துவமை படைத்த மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்திய மொழிகள் திருவிழா நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு  வெளியிட்டு இருந்தது.


டிசம்பர் 10ஆம் தேதி மாணவர்கள் மொழியின் தொன்மை குறித்து படங்கள், முழக்கங்கள் அதாவது ஸ்லோகங்கள்,ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்துதல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 11ஆம் தேதி வியாழக்கிழமை பாரதியாரின் தொலைநோக்கு பார்வை எனும் தலைப்பில் வகுப்புகளில் மொழி மரம் வரைதல்,கருத்து பட்டறை, பாரம்பரிய மொழிகளின் சுவர் என்ற தலைப்பில் இந்திய மொழிகள் சார்ந்த வரைபடங்களை அமைக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.




மகாகவி பாரதியின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய வரலாற்றை நினைவு கொள்வோமாக... 


11.12.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், சின்னச்சாமி ஐயர் லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். எட்டயபுர மன்னர் இவருடைய கவிப் புலமையை பாராட்டி "பாரதி "என்று பட்டம் வழங்கினார். நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகவும், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்த இவர் "மகாகவி" என்று போற்றப்பட்டார். பாரதியின் தந்தை இறந்த பிறகு சில காலம் காசியில் தன் அத்தை வீட்டில் வளர்ந்தார். பின்னர் தமிழ்நாடு திரும்பினார்.


மகாகவி பாரதியார் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றவராக விளங்கினார். இருப்பினும் தமிழ் மீது அதிக பற்று உடையவராக திகழ்ந்தார். "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழின் பெருமையை உலகறிய புகழ்ந்து பாடினார்.


பின்னர் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தார்.  "சுதேசமித்திரன்" பத்திரிகையில் 1904 முதல் 1906 வரை  பணியாற்றினார். "இந்தியா "எனும் வார இதழையும், "பாலபாரதம்" எனும் ஆங்கில இதழையும் 1907ஆம் ஆண்டு பொறுப்பேற்று நடத்தினார். மகாகவி பாரதியார் தமிழ் பற்று, தெய்வப்பற்று,தேசப்பற்று, மானுட பற்று ஆகிய நான்கும் கலந்தவராக திகழ்ந்தார். "பாஞ்சாலி சபதம் ","குயில் பாட்டு", "கண்ணன் பாட்டு "போன்ற காவியங்களை படைத்த பெருமைக்குரியவர். கீதையை தமிழில் மொழி பெயர்த்த பெருமையும் இவருக்கே.


மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகியும் அவர் தமிழ் சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவற்றைப் படிப்பவர் உள்ளத்தை ஈர்த்து உயிரோட்டமாய் உலவுகிறது. சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த அவர் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் பாரதி மறைந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் மகாகவி பாரதியார் அவர்களை" மக்கள் கவி" என்று போற்றினார்.


இந்தியாவின் தேசிய கலாச்சார உணர்வை ஒளிரச் செய்தார் பாரதியார். துணிவை தூண்டும் அவருடைய கவிதைகளும், தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பில்லாதவை. "பாட்டுக்கு ஒரு புலவன்" பாரதி. "முண்டாசு கவிஞன்" பாரதி.மூச்சிலும், பேச்சிலும்,எழுத்திலும், குருதியிலும் தமிழ் கலந்திருந்தது.எனவே, பாரதியின் கவிதைகள் இன்றும்,தானும் வாழ்ந்து தமிழையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன.


மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)

அதிகம் பார்க்கும் செய்திகள்