- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வீரத்தில் தோன்றிய
விளை நிலமாக.....
எங்கள் பாரதத்தின்
ஒளி வீசும்
கவி நிலவாக...
எட்டயபுரத்தின்
எழுச்சி மிகு
தோன்றலாக.....
செந்தமிழுக்கு தலைவணங்கி
நிற்கும்
நாயகனாக......
அநீதியை எதிர்த்து
போரிட்டு நிற்கும்
வீரனாக.....

காவியம் படைக்கும்
கவிஞருக்கு
எல்லாம்
கவிஞனாக......
முடிவில்லா தமிழுக்கு
முதன்மையான
தலைவனாக.....
முத்தமிழின் இன்பத்தை
இதயத்தில் ரசிக்கும் ரசிகனாக......
பராசக்தி அன்னையின் மீதுள்ள பக்தியின்
பக்தனாக......
தமிழினத்தின்
அன்புக்கு
அடிபணியும்
அரசனாக.....
பாரத தாயின்
பாசமிகு
மகனாக......
கார்வண்ண
கண்ணனின்
தோழனாக........
கண்ணம்மா வின்
இதயம் விரும்பிய
காதலனாக......
கன்னி பெண்களின்
கற்புக்கு
காவலனாக.....
எங்கள் பாரதம்
போற்றும்
பாரதியே........
வாழிய நின் புகழ்....
வாழிய செந்தமிழ்.....
வானுள்ள வரையில்
வையகம் போற்றிட....
எங்கள் பாரதம்
தந்த பரிசே
எங்கள்
பாரதி.....
வாழிய வாழிய வே....!
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}