மாலனுக்கு எழுதிய 6 பக்கக் கடிதம்!

Su.tha Arivalagan
Nov 19, 2026,03:21 PM IST

- பாரதிராஜன்


இவரைப்பற்றி எப்படி எழுதாமல் இருக்க முடியும்? இவரின் கதைகள் மூலமாக என்னை ஈர்த்தார். எழுதும் பாணி, சொற்களின் லாவகம், அது மட்டுமல்ல இவரை எப்போது முதலாக சந்தித்தேன்? 1975ல் சிங்காரச் சென்னை க்கு வந்ததும் இலக்கிய சிந்தனை என்ற அமைப்பைக் கேள்விப்பட்டு நானும் என் இளவலும் எல்டாம்ஸ்  ரோடில் இருந்த ஒரு சர்ச்சில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலை 6/30மணிக்கு நடைபெறும் கூட்டத்தில்  முதல் முதலாக மாலன், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜூ இவர்களை ஒரு சேரப்பார்த்ததில் மகிழ்ச்சி மகிழ்ச்சி.


கூட்டம் முடிந்ததும் மாலனுடன் பேசினேன், தொடர்ந்து கூட்டத்திற்கு மாதாமாதம் நானும் என் இளவலும் வர ஆரம்பித்தோம். 


மாலன் பிறகு திணமணி கதிரில் எழுதிய கதைகள் மூலமாக ரொம்பவும் ஈர்க்கப்பட்டேன். அதன்பிறகு சாவி மூன்று பத்திரிகைகள் ஆரம்பித்து அதில் திசைகள் என்ற பத்திரிகைக்கு மாலன் தான் ஆசிரியர். சில மாதங்களில் திசைகள் நிறுத்தப்பட்டது. 




அந்த சமயத்தில் ஈரோட்டில் பணி இருந்த நான் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டு 6 பக்கங்களில் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். பிறகு நான் வேறு பணி மாறி சென்னை வாசம். மாலன் பிறகு, தினமணி ஆசிரியர் ஆக பணிபுரிந்தபோது, திணமணி அலுவலகத்தில் அவருடன் பேசினேன். பிறகு அவர் இந்தியா டுடே தமிழ் பதிப்பு ஆசிரியர், குமுதம், தொடர்ந்து அவர் புதிய தலைமுறையில் பணி.


2013 ஆம் ஆண்டு ஒய். எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை ப்பார்க்கப் போனேன். புதிய தலைமுறை அரங்கில் என் இனிய நண்பர் மாலன் கைகுலுக்கி பேசிய போது மாலன் நான் ஆசிரியராக இருந்த திசைகள் பத்திரிகை திடீரென நின்றதில் என்னை விட அதிகமாக வருத்தப்பட்டு இவன் எழுதிய ஆறு பக்கக்

கடிதம் இன்னும் என்னிடம் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தது எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. 


அதாவது சுமார் 32 வருடத்திற்கு முன் நான் எழுதிய கடிதம், இம்மாதிரியான செய்ககைகளால் தான் இவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். 


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)