வெம்பாக்கம் வி.எஸ்.ராகவன்.. மறக்க முடியாத அல்ட்டிமேட் ஸ்டார்!
- பாரதிராஜன்
நடிகர் வி.எஸ். ராகவன்.. வெம்பாக்கம் கிராமத்தில் பிறந்து, கிராம பள்ளிக்கூடம் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் வாசம். பி.எஸ். பள்ளிக்கூட மாணவன். பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரி பட்டதாரி. தந்தை மறைந்த பிறகு புரசைவாக்கம் வாசம்.
ஆரம்பித்தில் துமிலன் என்கிற என். ராமசாமி அவருடைய மாலதி பத்திரிகையில் துணை ஆசிரியர். பிறகு ஐஎன்ஏ என்ற பெயரில் மாலிக வாதிராஜ், நடராஜ் மற்றும் கே.பாலச்சந்தர் உள்பட டிராமா கம்பெனி ஆரம்பம்.
ராகவன் சினிமாவுக்கு வந்ததும் நாடக சபா நடக்கவில்லை. சுமார் 1000படங்களுக்கு மேல் நடித்தவர். சிறந்த குணசித்திர நடிகர். பல்லாண்டு வாழ்க, பட்டணத்தில் பூதம் படங்களில் வில்லன். சிவாஜி படங்களான வசந்த மாளிகை, சவாலே சமாளி,உயர்ந்த மனிதன்.பாலச்சந்தர் படங்களான இருகோடுகள் அருமையான வேடம்.
இவரை தி.நகர் கிருஷ்ண கானசபா வில் நாடகத்திற்கு தலைமை தாங்க வந்தபோது பார்த்து பேசினேன். தவிர 1970 முதல் 1980வரை நிறைய சபாக்களில் வாலண்டியர் வேலை அதில் சினிமா நடிகர்கள் வந்தால் பார்த்து பேசுவேன். ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிறைய முறை ராகவன் சாரைப்பார்த்து பேசியதுண்டு.
பல்லாண்டு வாழ்க படம் பார்த்து அவருடைய வில்லன் வேடத்தை பார்த்து அசந்து போனேன். அதன் பிறகு ஒரு நிகழ்வில் அதைப்பற்றி பேசினேன். அதற்கு அவர் சொன்ன பதில் தம்பி சினிமாவில் எனக்கு கொடுத்த வேடம். அதனை நீ பின்பற்றாதே என அறிவுரை கூறினார்.
டெலிவிஷன் சீரியலிலும் நடித்தவர். மறக்க முடியாத குணசித்திர நடிகர்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)