387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!

Su.tha Arivalagan
Aug 24, 2026,12:33 PM IST

- பாரதிராஜன்


சென்னை மாநகரம் 387 வயதைத் தொட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்த மாநகரம் என் பார்வையில்..


சென்னை அண்ணாசாலை [முன்னர் மவுண்ட் ரோட்] மிக மிக உயர்ந்த 14 மாடிக் கட்டிடமான எல்.ஜ.சி, தேவி குரூப்ஸ்  தியேட்டர், சாந்தி, ஒரே சினிமா தியேட்டர் தான். 




எப்ப போனாலும் எந்த புத்தகம் வாங்கும் இடமான மூர் மார்க்கெட், ஜூ அல்லது செத்த காலேஜ் என்றழைக்கப்பட்ட எழும்பூர் மியூசியம். கன்னிமாரா நூலகம், கன்னிமாரா ஹோட்டல், ஆங்கில நாளேடுகளான ஹிந்து, எக்ஸ்பிரஸ், மெயில் அலுவலகங்கள். 


உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்று பெயர் பெற்ற மெரினா பீச் 365நாளும் கூட்டம் கூட்டம்தான்.  

அதன் எதிரே அரசு அலுவலகங்கள், தொலைக்காட்சி நிலையம், காப்புக்கட்டிச் சத்திரம், பாப்பா மலர் போன்றவை ஒலிபரப்பும் வானொலிநிலையம். 


சாந்தோம் சர்ச், லைட் அவுஸ், ஆற்காடு நவாப்புக்கு சொந்தமான அமீர் மஹால், புகழ்பெற்ற கல்லூரிகளான பிரசிடென்சி, ராணி மேரி பெண்கள் கல்லூரி. 


முண்டாசுக்கவி பாரதியார் வாழ்ந்த இல்லம், 108 வைணவத் தலங்களின் பார்த்தசாரதி, ஆழ்வார்களில் முதல்வரான பேயாழ்வார் அவதரித்த ஸ்தலம், மயிலை கபாலி, முண்டக்கன்னி அம்மன், சாயிபாபா கோயில், புகழ்பெற்ற பி.எஸ். சாரிட்டிஸ் நடத்தும் பி.எஸ். பள்ளிகள், மாலை வேளைகளில் பொழுது போக ரசிக ரஞ்சனிசபா, நாரதகான சபா, டிசம்பர் மாதம் முழுக்க கச்சேரி களைகட்டும் மியூசிக் அகாதமி, விவேகானநாதர் கட்டிடம்அமைந்துள்ள

 ஐஸ்அவுஸ், அரசு மருத்துவமனை, கல்யாணி மருத்துவமனை, முன்னாள் குடியரசுத்தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வசித்த கிரிஜா ஹவுஸ்.


மக்கள் தொகை அதிகமாக அதிகமாக மின்சார ரயில், பஸ் மட்டும் போதாமல் பறக்கும் ரயில் முதலில் மயிலை, தற்போது வேளச்சேரி வரை, இப்போது அதையும் நீட்டித்து விட்டார்கள். இன்னும் மெட்ரோ ரயில் செண்டிரல், மீனம்பாக்கம், கோயம்பேடு, திருவொற்றியூர் வரை.


சொல்லிக் கொண்ட போகலாம் சென்னையின் பெருமைகளை.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நம் மனதுக்கு இனிய மெட்ராஸுக்கு.


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)