கோபம் என்ற அரக்கனை எரித்து.. பொறாமை என்ற பகைவனை.. பொசுக்குங்கள்!

Su.tha Arivalagan
Jan 14, 2026,01:35 PM IST

- கவிஞர் சு நாகராஜன்


பழையன கழிதலும்

புதியன புகுதலும் போகி

பழையன எரிக்கலாமே

கோபம் என்ற அரக்கனை

எரித்து விடுங்கள்

பொறாமை என்ற பகைவனை 

பொசுக்கி விடுங்கள்

வஞ்சனை என்ற கம்சனை 

வதம் செய்து விடுங்கள்

தீமை செய்தல் 

என்ற கொடூரனை

தீயில் போட்டு 

தீயிக்கு இரையாக்குங்கள்

போட்டி பொறாமை

கோபம் வாக்குவாதம் 




இன்னும் பிற செயல்களை

இன்றோடு புதைத்து விடுங்கள்

ஆம் 

அன்பு என்னும்

அமிர்தத்தை எடுத்து 

அனைவரிடமும் 

பகிருங்கள்

ஒழுக்கம் என்னும்

ஓர் மந்திரத்தை 

சொல்லி

பிறரையும்

சொல்ல வையுங்கள்


யாசகம் வேண்டி

நிற்பவரிடம் 

பொருள் கொடுத்து 

உதவுங்கள்

இந்நிலை 

தொடர வேண்டாம் எனில்

அவர்களுக்காக

கடவுளிடம் 

மன்றாடுங்கள்


சிலுவையில்

தொங்கிய இயேசுவும்

கள்வனுக்காக 

மன்றாடினார் 

இன்றைக்கு நீ

என்னுடன் கூடவே 

பரலோகத்தில்

இருப்பாய் என்றார்


ஆம் 

இப் போகித் திருநாளில்

அனைவரும்

இன்புற்று

அன்பு

என்ற பூக்களை எடுத்து

ஒவ்வொர் மேலும்

மணக்க செய்திடுவோம்


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)