நீ வாழும் கணக்கு!

Su.tha Arivalagan
Dec 25, 2025,01:09 PM IST

-இரா. காயத்ரி


வாழ்க்கைக்கு வேண்டும்

சரியான கணக்கு

வாழ்கையில் தெரியும்

மனிதன் போட்டக் கணக்கு


சேமித்து பழகினால்

இலாபக் கணக்கு

சேமிக்க மறந்தால்

நட்டக் கணக்கு




எல்லோர் மனதிலும்

அன்பை பெருக்கு

என்றுமே வேண்டாம்

பகைமையை நீக்கு


எங்கும் எதிலும்

இருப்பது கணக்கு

விடியலும் இரவும்

இயற்கை கணக்கு


உறவுகளிடம் வேண்டாம்

என்றும் பிணக்கு

உயர்ந்த குணமே

உனக்கு சிறப்பு


வானமும் பூமியும்

வரையறையா உனக்கு

நீ வாழும் கணக்கு

உனது எண்ணத்தில் இருக்கு!


(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம்)