உன் வாழ்த்துகளால்.. பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?
Jan 06, 2026,10:16 AM IST
- ப. பூரணவள்ளி
பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு
நீ கூறும் அன்னையர் தின வாழ்த்துகள்
அவளுக்கு இனிக்குமா?
உன் வாழ்த்துகளால்
பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?
பசியால் வாடும் அவள் பஞ்சம் தீருமா?
அவள் உன்னிடம் கேட்பது
கஞ்சியும் கனிரசமும் இல்லை
உன் அருகிலிருக்கும் வரமே அன்றி
வாழ்த்துகளல்ல.
வாஞ்சையுடன் அவளின் குச்சிக் கரம் பற்றி
அம்மா நான் உன் உடன் இருக்கிறேன்
என்ற உறுதிப்பாட்டை
நீ கொடுக்காதவரை
உன் வாழ்த்துகளால்
அவள் மகிழப் போவதில்லை.
அவளுக்கு நீ கூறும் வாழ்த்துகள்
சொல் அல்ல செயல்.