சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
சென்னை: சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது. மாணவி ஸ்வாதி பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி 2025-2026 ஆம் ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு முடிவுகளில் 98.10% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு இப் பள்ளியிலிருந்து மொத்தம் 158 மாணவ மாணவியர் தேர்வெழுதினர். அவர்களில் 155 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவைச் சேர்ந்த ஸ்வாதி S என்ற மாணவி 600-க்கு 572 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 96, 87, 99, 95, 98, 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அதே பிரிவைச் சேர்ந்த தேவ தர்ஷினி S என்ற மாணவி 600-க்கு 565 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 97, 87, 91, 95, 96, 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும், கலைப்பிரிவைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி 600-க்கு 556 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் முறையே 97, 87, 89, 95, 96, 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும் பிள்ஸடூ தேர்வில், செங்கல்பட்டு மாவட்டத்திலேயே ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி 3வது இடத்தையும் பெற்று .சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
பிளஸ்டூ தேர்வில் மாநில அளவிலும் அரசுப் பள்ளிகள் மற்றம் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் அசத்தலான தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: ஆசிரியர் மு. பாரதி