ஒரே வானம் ஒரே பூமி ஒரே வாழ்க்கை!

Su.tha Arivalagan
Apr 22, 2026,10:43 AM IST

- கனல்கவி சென்னிமலை அ.சீனிவாசன்


இயற்கையின் கொடை 

இனிதான 

பூவுலகமே


செயற்கையைப் 

புறக்கணிக்கச் 

செழிப்புறும் 

அவனியே 


எல்லையே 

இல்லாத 

வானமும் 

சொர்க்கமே




தொல்லையே

தராமல் 

காத்திடு 

பூமியையே 


வரமென 

வாய்த்ததைக் 

காத்திட 

வேண்டாமா? 


திறமையோடு

நம்பிக்கை வளர்த்திடு 

எப்போதுமே


அன்பாலே 

அரவணைக்க ஆனந்தம் 

மேலோங்கும்


பண்பாட்டை 

வளர்த்திடு 

வாழ்த்திடும் 

தலைமுறையே 


நீர்க்குமிழி 

வாழ்விது 

நிதர்சனம் 

உணர்ந்திடு 


உழைப்பால் 

உயர்ந்திடு

உன்னதமாகும் 

வாழ்நாளே


(கனல்கவி சென்னிமலை அ .சீனிவாசன், சொல்வளம் நிறைந்து கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவர். கவித்துளி 

கற்பனையின் ஊற்று நடத்திய சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்று எழுதப்பட்ட கவிதை இது)