மணிமாவின் April 1.. நீங்கள் ஏமாற்றப் போகிறீர்களா.. அல்லது ஏமாறப் போகிறீர்களா?

Su.tha Arivalagan
Apr 01, 2026,06:50 PM IST

- மணிமா


ஏப்ரல் ஒன்று அன்று நாம் மற்றவர்களை முட்டாள்கள் ஆக்குவது, இல்லையெனில் நாம்  நாம் மற்றவர்களால் முட்டாள்கள் ஆவது என்பது விளையாட்டாக வருடம் தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ..


குழந்தைப் பருவம் அனைவருக்கும் பசுமையான நினைவு காலம். நாளை ஏப்ரல் ஒன்று என்று இன்று படுக்கைக்கு இரவு செல்லும் போதே நாளைக்கு யாரிடமும் நாம் ஏமாந்து விடக்கூடாது என்று ஒரு சபதம்


அடுத்த நாள் சாமியிடம் வேண்டுதல் இன்றைக்கு யாரும் என்னை முட்டாளாக்கி விடக்கூடாது. குழந்தைப் பருவ மலரும் நினைவுகள் எல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.


எனது குழந்தை பருவத்திலும் ஏப்ரல் ஒன்று வந்தது. தாத்தா பாட்டி வீட்டில் பேரக்குழந்தைகளாக நாங்கள் 12 பேர் விளையாடினோம்..


கிராமத்து செட்டிநாடு பெரிய வீடு




நடு முற்றத்தில் கேரம்போர்டு நான்கு பேர் மற்றவர்கள் ஒருவர் கண்டுபிடிப்பது மற்றவர்கள் தூணுக்கு பின்னால் ஒளிந்து கொள்வது

குழந்தைகளாக விளையாட்டுக்குள் லயித்து விளையாடும் சமயம் அண்ணா வந்தான் 12 வயது எங்கள் எல்லோரையும் விட அவன் தான் பெரியவன்


ஐயோ பாம்பு பாம்பு என்று கத்த ஆளுக்கு ஒரு பக்கம் சிதறினோம்.

ஏப்ரல் ஒன்று முட்டாளாக்குகிறான் அதெல்லாம் மறந்து நிஜமாகவே பாம்பு வந்த தாக உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கத்தி கொண்டு ஓடுகிறோம்.

சின்னத்தம்பி குண்டு தம்பி கேரம் போர்டு மேல் ஒரு காலை வைத்து ஏறி வந்ததில் கேரம்போர்டு உடைந்தது மிச்சம்.

முற்றத்தின் மூலையில் ஒரு லாந்தர் விளக்கும் ஒரு தீப்பெட்டியும் இருந்தது.

ஓடின வேகத்தில் தங்கை அதை தட்டி விட கிளாஸ் உடைந்து மண்ணெண்ணெய் வெளியே வந்து கிடந்தது.

அண்ணன் மட்டும் இடுப்பில் கை வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்


அழுத சத்தம் கேட்டு தாத்தாவும் சித்தப்பாவும் அங்கு வந்து அண்ணா முதுகில் சுளீர் என்று சித்தப்பா அடி வைத்தார்கள்.

ஒரு வழியாக ஏப்ரல் ஒன்று மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் திட்டு வாங்கியும் முடிந்தது


இப்போது நாங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது பிள்ளைகளிடம் இதைப் பற்றி எல்லாம் சொல்லி சிரிப்போம்.


நான் மட்டும் அண்ணனிடம் சொல்லுவேன் அன்று நீ எங்கள் எல்லாரையும் முட்டாள் ஆக்கினாய் ஆனால் நீ அடி வாங்கி அடி முட்டாளாகி விட்டாய் என்பேன்.

மலரும் நினைவுகள் மறக்க முடியா நினைவுகள்.

குழந்தைகளாக இருக்கும் போது இதெல்லாம் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் தவறில்லை ....


ஏப்ரல் ஒன்று என்றாலே உண்மையான செய்தியை ஒருவர் சொன்னால் கூட பொய் இது நம்மள ஏப்ரல் ஃபூல் பண்ணுகிறார்கள் என்று நம்ப முடியாத அளவுக்கு  இந்த ஏப்ரல் ஒன்று முட்டாள்தனமாக மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது.


இப்போதும் அன்றைய தினம் ஒருவரை ஒருவர் முட்டாள் ஆக்கலாம்.

ஆனால் ஒருபோதும் அவர்கள் தன்னம்பிக்கையை  முறியடிக்கும்படி முட்டாளாக்குவது சரியல்ல ...

குழந்தைகளை பொறுத்த வரை அது விளையாட்டாகவே இருக்கட்டும்.

பெரியவர்கள் ஏன் நாம் அதனை நம்பிக்கை தினமாக மாற்றிக் கொள்ளக் கூடாது ..


ஒருவர் சந்தோஷத்தில் இருக்கும் போது அவருடன் மகிழ்வில் பங்கு கொண்டால் மனிதன் ஆகலாம்...


ஒருவர் துக்கத்தில் இருக்கும் போது அவரது துயரில் பங்கு கொண்டால் மானிடன் ஆகலாம் ..


மனிதனாக இருந்தால் மற்றவரை போற்றுவாய் ...


மானிடராய் இருந்தால் மற்றவர்களால் போற்றப்படுவாய்


மகிழ்வில் போற்றுவதும்,

துயரில் போற்றப்படுவதும்,

என்றுமே நம் கையில்.


மீண்டும் சந்திக்கும் வரை அன்புடன் 

மணிமா