- மணிமா
செட்டிநாட்டு அடுப்படியின் உக்காரைக்கு வரவேற்பு தந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் .........மணிமா...வின் மனம் நிறைந்த நன்றிகள் ..
இதனைப் பதிவிடும் தென் தமிழ் பத்திரிகைக்கும் அவர்களுக்கும் நிறைந்த நன்றிகள் .. சரி இன்னிக்கு என்ன ஸ்பெஷல்னுதானே எல்லோரும் காத்திருக்கீங்க.. வாங்க கிச்சனுக்குள் போகலாம்.
வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் எளிதான சமையல் பொருட்களை வைத்துக்கொண்டு அதனோடு அன்பையும் சேர்த்தால் சுவையான செட்டிநாட்டு சமையல் ரெடி. அந்த வரிசையில் இன்று 15 நிமிடத்தில் மிக எளிதாக செய்யக்கூடிய சுவையான சூப்பரான வாழைக்காய் ஃபிரை.
தேவையான பொருட்கள் ..

வாழைக்காய் ஒன்று
தேங்காய் எண்ணெய் ..ஒரு குழிக்கரண்டி 50 மில்லி
சிவப்பு வற்றல் மிளகாய் 6..
வெள்ளைப் பூண்டு ..10.பல்.
சோம்பு (பெருஞ்சீரகம்) .ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை 10 இலைகள்
ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் வாழைக்காயை மேல் தோலை மட்டும் கத்தி வைத்து மேலாக எடுத்துக் கொள்ளவும். நீள வாக்கில் நான்காக நறுக்கிய பின் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு வற்றல் மிளகாய் ..சோம்பு வெள்ளைப் பூண்டு. கருவேப்பிலை உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் எல்லாவற்றையும் மிகச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். நைஸ் ஆக இருக்க வேண்டியதில்லை

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு மிகச் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் பொழுது வாழைக்காய் துண்டுகளை அதில் போட்டு இரண்டு நிமிட நேரம் வேக விடவும். அரை பாகம் தான் வேக வேண்டும். பாதி வெந்தால் போதும்.தண்ணீரை ஒட்ட வடித்து விடவும் (வாழைக்காயில் வாய்வு நீங்கிவிடும்)
ஒரு தட்டில் பரப்பி விடவும் அரைத்த மசாலாவை நன்கு வாழைக்காயில் படும்படி பிரட்டி 10 நிமிட நேரம் ஊற விடவும் ..ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிது கடுகு சிறிது உளுந்தம் பருப்பு போட்டு வெடித்த உடன் வாழைக்காயை அதனுடன் சேர்த்து அடுப்பை நிதானமாக எரிய விட்டு ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை பிரட்டி கொடுக்கவும்.
மூன்று நிமிடத்தில் சுவையான வாழைக்காய் ஃப்ரை ரெடி இது சூடான நெய் சாதத்துடன் சாப்பிடும் பொழுது பிரியாணி போல இருக்கும் சாம்பார் சாதத்துடன் தயிர் சாதத்துடன் அருமையாக இருக்கும்.
சமைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள். சந்தோஷமாய் பகிருங்கள்
விரைவில் அடுத்த ரெசிபியுடன் சந்திக்கிறேன் .. உங்கள் மணிமா!
பூவ பூவ பூவே.. மனதை அமைதியாக்கும்.. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தும் பூக்கள்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
கூரைவீடு !
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
பனிக்குப் போர்வையாகவும்.. வெயிலுக்கு நிழலாகவும்!
{{comments.comment}}