அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?

Jun 27, 2026,01:36 PM IST

சென்னை : தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக், காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் தான். இதில் குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அம்பாசமுத்திரத்தில் களம் காணும் சீமான்:

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளரிடம் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். இந்நிலையில், தற்போது வரவிருக்கும் இடைத்தேர்தலில் அவர் மீண்டும் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.இது குறித்து நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த சீமான்,




"தற்போது காலியாக உள்ள 6 தொகுதிகளில் நான் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சி (நாதக) தொண்டர்களின் விருப்பமாக இருந்தது. அதேபோல் மாற்று அரசியல் கட்சியினரும் நான் போட்டியிட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான ஆலோசனையில், அம்பாசமுத்திரம் தொகுதி எனக்கு உகந்ததாக இருக்கும் என்று முடிவு செய்து அங்கு போட்டியிடவிருக்கிறேன். மற்ற 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரா?

இதற்கிடையே, அம்பாசமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'பொது வேட்பாளராக' சீமான் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆளுங்கட்சிக்கு எதிராகப் பலமான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தற்போதைய அரசியல் சூழல் கூறுகிறது. தனித்து நின்று களம் காண்பதையே வழக்கமாகக் கொண்ட நாம் தமிழர் கட்சி, இந்த இடைத்தேர்தலில் பிற கட்சிகளின் மறைமுக அல்லது அதிகாரப்பூர்வ ஆதரவைப் பெற்றுப் பொது வேட்பாளராக நின்றால், அது தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக அமையும்.


அரசியல் எதிர்பார்ப்புகள்:

காரைக்குடி தொகுதியில் ஏற்பட்ட தவெக-விடம் பெற்ற வீழ்ச்சிக்குப் பிறகு, சீமான் இந்த முறை அம்பாசமுத்திரத்தில் தனது முழு பலத்தையும் நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆதரவு குறித்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், ஆளுங்கட்சிக்கு இந்தத் தொகுதி மிகக் கடுமையான சவாலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டதால், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இப்போது இந்தத் தொகுதியின் மீதே திரும்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

news

முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

news

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்