Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

Aug 19, 2026,06:37 PM IST

- சுதா திருநாராயணன், திருச்சி


இப்போது கார்னிவல் ஸ்ப்ளெண்டர் என்ற பிரம்மாண்ட கப்பலைப் பற்றிய வர்ணனை. 


கப்பலின் விலை -  650 மில்லியன் டாலர். 

நீளம் 952 அடி. 

விருந்தினர்கள் எண்ணிக்கை - 3734 

பணியாளர்கள் -1,160 

சுமாராக ஒரு வாரத்திற்கு சமைக்கப்படும் அசைவ உணவு : 10,000 பவுண்டு சிக்கன், மூவாயிரம் பவுண்டு ஷ்ரிம்ப், 5,600 ஹாட் டாக்,  7350 ஹாம்பர்கர், நான்காயிரம் ஸ்டீக், இன்னும் என்ன என்னவோ வாயில் நுழையாத பெயர்கள்.   

காலை சிற்றுண்டிக்கு - 65 ஆயிரம் முட்டைகள், 

2500 கேலன் பழச்சாறு, 

1200 கேலன் பால், 

3000 பவுண்டு வெண்ணை, 

4500 பேகல் எனப்படும் ரொட்டி வகை, 

பத்தாயிரம் பேக்கட் சீரியல் வகைகள், 

22,500 பிரெட் பாக்கெட், 

15000 பேஸ்ட்ரி, 

4800 ஃப்ரெஞ்ச் டோஸ்ட், 

5200 பேன் கேக்குகள்.


 


மேலும் பல்லாயிரக்கணக்கான கிலோ அளவுகளில் தக்காளி, உருளைக்கிழங்கு, குடைமிளகாய், வெள்ளரிக்காய், வாழைப்பழம், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள். இவை யாவுமே ஒரு வாரத்திற்கான அளவு. மேலும் மதுப் பிரியர்களுக்கு 17 ஆயிரத்து 90 பியர் பாட்டில்கள்,  2010 ஒயின் பாட்டில்கள். 


குளிர்பான பாட்டில் - 18 ஆயிரத்து 170. இன்னும் ஜின், ரம், வோட்கா, எல்லாமே எழுதி மாளாது. சைவ உணவு வகைகளும் எண்ணில் அடங்கா. டன் டன்னாக இருக்கும் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை , பியர்ஸ் எனப்படும் பேரிக்காய். இவையெல்லாம் காலை உணவிற்கு வைக்கப்பட்டிருந்தன. வேகவைக்கப்பட்ட ஓட்ஸ், சுடச்சுட ,  பலவிதமான சிரியல்கள் (cereals), நூற்றுக்கணக்கான கேக் வகைகள், இன்னும் என்னென்னவோ.  பனம் குருத்தில் செய்யப்பட்ட ஊறுகாயை இன்னும் எனது நாக்கு மறக்கவில்லை.


கப்பல் உள்ளே வகைவகையான நீச்சல் குளங்கள். சறுக்கி வரலாம், டைவ் அடித்து குளிக்கலாம், எதிலும் ஆழம் கிடையாது மிகவும் பாதுகாப்பானது. கார்னிவல் ஸ்பிளென்டரை நகரும் அரண்மனை என்று குறிப்பிட்டேன், அது மட்டும் அல்ல, அதன் உள்ளே ஒரு நகரமே இருக்கிறது. கப்பலில் நான் அனுபவித்த இளங்காலை பொழுதுகள் மிக இனிமையானவை.


கதிரவனின் கிரணங்களோடு கடல் அலைகளின் குதூகல விளையாட்டு அற்புதம். 


'கடலரசி மூப்பை மறைக்க முயற்சிக்கிறாளோ? 

ஆங்காங்கே ஆதவனின் இளம் கிரணங்கள்  வெள்ளிக் கற்றைகள் போல் காட்சியளித்தன,

இலைமறைவு காய் மறைவாய்.

ஆதித்யனும் ஆர்வத்துடன் அவற்றை 

வெளிக்கொணர்வதிலேயே  

குறியாக இருந்தான். 

கடல் அழகியின் சிரத்தில்  

வெள்ளி ஆபரணமாய் ஜொலித்தான். 


பெரிய பெரிய சதுரங்கக் கட்டங்களில் நாங்களே காய்களாக நின்று விளையாடினோம். 


தினமும் அறைகள் தூய்மைப்படுத்தபடும்.


துவாலைகளால் மிக நேர்த்தியான பொம்மைகள் உருவாக்கப்பட்டு அதி அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். இன்னும் எவ்வளவோ விஷயங்கள், மிக முக்கியமானது, சமையலறை கழிவு நீர், பாத்ரூம் டாய்லெட் கழிவு, எல்லாம் சுத்திகரிக்கப்பட்டு கடலில் விடப்படுகிறது. டாய்லெட் வேஸ்ட் தண்ணீர் மட்டும் சுத்திகரிக்கப்பட்டு கடலில் விடப்படுகிறது. கடல்நீரை மாசுபடுத்துவது இல்லை. திடக் கழிவுகள் பயணம் முடிந்த பிறகு நிலத்தில் புதைக்கப்படுகின்றன. 


பராமரிப்பும் தூய்மையும் முதல்தரம். ஏழு நாட்களும் நாம் பிரதம விருந்தினர்கள். சாப்பிட்ட தட்டுகள் டம்ளர்கள் கப்புகள் உடனுக்குடன் அப்புறப் படுத்தப்படுகின்றன. என் வாழ்க்கையின் மகத்தான தருணம், என் மகளும் மருமகனும் அளித்தனர். கனவா நனவா என்ற மாயா லோகத்திலே சஞ்சரித்து திரும்பி வந்தோம்.


கப்பலின் உள்ளே ஒரு தியேட்டர் உண்டு. அதில் தினமும் காமெடி ஷோ நடக்கும். அதேபோல் நாடகங்களுக்கும் நடனங்களுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமே இல்லை. மாலை 6 மணியில் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் எப்போது வேண்டுமானாலும் போகலாம் பார்க்கலாம் ரசிக்கலாம். இந்த சொகுசுக்  கப்பலில் பயணித்த போது என் இரண்டாவது  பேத்திக்கு ஆறு வயது. எழுதி வைக்காவிட்டால் அன்றன்றைக்கு நடந்தது நினைவிருக்காது என்பதால் நோட்புக் ஒன்று கையில் வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது எழுதிவிடுவேன்.


என் பேத்தி என்னிடம் “பாட்டி நீ இங்கிலீஷில் எழுது,  நான் உனக்கு சொல்லி தரேன் இங்கிலீஷ்” என்று கூறி ஏபிசிடி எழுதி தந்தாள்.  சொகுசு கப்பலில் அனுபவித்ததை விட இதுதான் என் மனதை மகிழவைத்த சிறப்பு பரிசு. என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகள்.  


(இப்போதைக்கு முற்றும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்