Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!

Aug 18, 2026,10:24 AM IST

- சுதா திருநாராயணன், திருச்சி


காபோவிற்கு ஏசி பஸ்ஸில் பயணித்தோம். எங்கள் கைடின் பெயர் மெமோ. எல்லோரும் அழைக்க சுலபமாக இருக்க வேண்டும் என்று அப்படி வைத்துக் கொண்டாராம். பொதுவாக மெக்சிகோவில் தொழில் மீன் வளர்ப்பும், டூரிஸம் மட்டும்தான். காபோவில் பார்க்கத் தகுந்ததாக ஒன்றுமில்லை. மிகப் பழமை வாய்ந்த கதீட்ரல்லுக்கு சென்றோம். வெயில் கொளுத்தியது. நிறைய மெடிக்கல் ஷாப்கள். எல்லா மருந்து கடை அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்த ஒரு பெயர் வயாக்ரா.!!! அதனால் பாலியல் தொழில் அதிகமோ என தோன்றியது. காபோவில் தனிநபர் வருமானம் ஒரு நாளைக்கு 10 டாலர் தானாம். துறைமுகக் கரையிலும் பல இடங்களில் 10 வயது சிறுமி உட்பட பல பெண்கள் நடனமாடி டூரிஸ்ட்களை கவர்ந்திழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். 


நம்மூர் போலவே நிறைய கடைகள். ஆடை அணிகலன்கள் கண்ணைக் கவர்ந்தன. ஒரு ஹோட்டலின் பெயர் வினோதமாக இருந்தது. "சீனியர் ஃபிராக்ஸ் (frogs), ஐ அம் சாரி விஆர் ஓபன்". இதுதான் பெயர். ஒரு பெரிய தவளையின் படம் வேறு. சிரிப்பும் வாந்தியும் வந்தன. இன்னொரு கடை வாசலில் உயிருள்ள பச்சோந்தியை தலையில் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் பலர். 


மஸால்டன்னுக்கு செல்ல முதலில் வாட்டர் ஷட்டிலில் பயணித்தோம். அது ஒரு சின்ன போட். 50 நபர்கள் அமரக்கூடியது. குளிர்பானமும், பியரும் அருந்துவதற்கு கொடுத்தனர். நாங்கள் பியர் அருந்தவில்லை.  கடற் குகைகளை கண்டு ரசித்தோம். பின்னர் பஸ் பயணம். வெளியில் 112 டிகிரி வெயில் கொளுத்தியது.

 வெள்ளி நகை கடை ஒன்றை பார்த்தோம். என் கணவர் எங்கு சென்றாலும் சந்தியாவந்தனம் மாத்யாஹ்நிகம் போன்ற அனுஷ்டானங்களை  தவறாமல் செய்து விடுவார். அதேபோல் அன்றும் இந்த வெள்ளிநகைக்  கடை வாசலில் இவர் மாத்யாஹ்நிகம் செய்து சூரியனை வழிபட்டதைக் கண்டு அந்த கடைக்காரர் மிகவும் மகிழ்ந்து போனார். 


"என்ன செய்கிறீர்கள்"? என்று கேட்டார். "உணவுக்கு முன் நாங்கள் சூரியனை துதிப்போம்" என்று கூறியவுடன், மிகவும் அருமையான பழக்கம் என்று எங்களை ஆனந்தத்துடன் வாழ்த்தினார். கப்பலில் (Spa) ஸ்பாவிலேயே  சிறுவர்  சிறுமியர் நடுத்தர வயதினர் என அனைத்து மக்களும் நீராடியும் குதித்தும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது சந்தியா வந்தனம் செய்த மகானுபாவன் இவரே. வெளிநாட்டு மக்களின் சிறந்த பண்பு, மற்ற நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களை ரசிப்பதுடன் அதைப் பற்றி தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். 




அதேபோல் கப்பலில் அமாவாசை தர்ப்பணம் செய்த ஒரே நபர் என் கணவர் மட்டும்தான்.  மேல் டெக் சென்று தர்ப்பணத்தை செய்துவிட்டு வந்தார். கப்பல் கேப்டன் இவரைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனாராம். என் கணவர் நெற்றியில் இட்டுக்கொண்டிருந்த திருமண் ஸ்ரீ சூர்ணத்தை(நாமம்) பார்த்த பல அமெரிக்கர்கள் ஐ லைக் தட் என்று கூறி என் கணவரின் நெற்றியை தொட்டு வாழ்த்தினர். 


கப்பலுக்குள் மாடிகளுக்கு செல்ல லிஃப்டுகள் நிறைய. கண்ணாடி லிப்ட் வேறு. சுமார் 40 லிஃப்டுகள் இருக்கும். எல்லாவற்றிலும் ஏறி ஏறி இறங்கி கொண்டிருந்தோம்.


மெக்சிகோவில் நிறைய மாமரங்கள் தென்னை மரங்கள். மெக்சிகோ ஏழை நாடு. நெருக்கமான தெருக்களில் நெருக்கமான வீடுகள். ஆனால் எங்கும் குப்பை இல்லை. 


இன்று எங்களுடன் வந்த வழிகாட்டி மிஸ் அலிட்டா. மெக்சிகோ உஷ்ண பிரதேசமாக இருந்தாலும் மக்கள் நல்ல நிறத்துடன் காணப்பட்டனர். பலருக்கு இந்திய முகச் சாயல். மெக்சிகோ மக்கள் அதிகமாக ஆங்கிலம் பேசுவதில்லை. 

மெக்சிகோவில் கல்லூரிகள் அதிகமாக இருப்பதாகத் தெரியவில்லை.


மஸால்டனில் கிளாஸ் தொழிற்சாலை, அலைச்சறுக்கு விளையாட்டு கண்டு களித்தோம்.  கிளாஸ் ஃபேக்டரியில் கண்ணாடியை நெருப்பிலிட்டு ஊதி ரப்பர் போலாக்கி நிறைய பொம்மைகள் செய்து காட்டினர்.எவ்வளவு நாசுக்கான வேலை, மிகவும் அனாயாசமாக செய்து காட்டினர். கண்ணாடி, பலூன் போல் உப்பியதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  அடுத்ததாக புயார்ட்டோ வலார்ட்டா சென்றோம். காலை 11 மணிக்கு கப்பலுக்கு வெளியில் வந்தோம். கரையோரத்தில் வந்து பஸ் எங்களை பிக்கப் செய்தது. டால்பின் ஷோ பார்த்தோம். கடல் சிங்கத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கடல் சிங்கம் எங்களை முத்தமிட்டது.

[17-08-2026 10:59] Arivu Alagan: டால்ஃபின் உடன் விளையாட லைப் ஜாக்கெட் அணிந்து அது இருக்கும் நீச்சல் குளத்தில் இறங்கினோம். டால்ஃபின் எங்கள் அருகில் வந்து ஒவ்வொருவராக முத்தமிட்டது, நாங்களும் முத்தமிட வேண்டும் என்று கன்னத்தை காட்டியது. அதனுடைய ட்ரெயினர் சொன்னதையெல்லாம் செய்தது. பாட்டுப் பாடியது,  சிரித்தது , டைவ் அடித்தது. சிலர் டால்ஃபின் முதுகில் சவாரி செய்தனர். டால்ஃபின் மோட்டர் பைக் போல் சீறிக் காட்டியது. தன் இறக்கை போன்ற கால்களை படபடவென்று அடித்து தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தியது.  ஒவ்வொரு முறையும் அதற்கு ஒரு சின்ன மீன் பரிசு. 


நாங்களும் டால்ஃபின்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். டால்ஃபின்னின் பெயர்கள் மிக வேடிக்கை. ஒன்றின் பெயர் சான்யா, Shanya, ஆனால் அழைத்தது என்னமோ சாணி என்று அழைத்தனர். மற்றொரு டால்பினின் பெயர் மலம், malham. நாங்கள் ஏன் சிரிக்கிறோம் என்று அந்த ட்ரெய்னருக்கு புரியவில்லை. 


டால்ஃபின் பாலூட்டிகள். ஒரு முறைக்கு ஒரு குட்டி மட்டுமே ஈன்ற கூடியவை. 12 அல்லது 13 மாதங்கள் பேறுகாலம் என்று டிரெய்னர் கூறினாள். ட்ரெயினர் மிக நன்றாக ஆங்கிலம் பேசினாள். நல்ல நீரில் நீராடி உணவருந்த சென்றோம். மெக்சிகோ சைவ உணவு மிகவும் ருசியாக இருந்தது. அவகேடோ பச்சடி, கலவை காய்கறி சாலட், சர்க்கரை பாகில் இட்ட பொரித்த பூரி ருசியோ ருசி. நாங்கள் சாப்பிட்ட உணவகத்தில் நாய்க்குட்டியை போல் அருகில் வந்து எல்லோரையும் கவர்ந்த ஓர் மிருகம் ஒரு பெரிய்ய்ய்ய்ய  சைஸ் மரப்பல்லி, ஓணான் என்றும் சொல்லலாம். 


Hona என்றார்கள் அவர்கள். மூன்றடி நீளத்திற்கு  ஒரு குட்டி முதலை சைஸில்  அழகாக  காட்சியளித்தது. நான்கைந்து ஓணான்  அதுபாட்டுக்கு வந்தன. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. யாரையும் தொந்தரவு செய்யவில்லை பயமுறுத்தவில்லை. சாதுவாக கீழே சிந்தும் உணவுவகைகளை அழகாக  சாப்பிட்டன. அவை சைவமாம். என்னே, இயற்கையின் அற்புதம். என் பேத்திகள் இருவரும் அவைகள் பின்னாலேயே ஓடிக் கொண்டிருந்தார்கள். 


மீண்டும் பஸ்ஸில் பயணித்துக் கப்பலுக்கு திரும்பினோம்.  


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!

news

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு

news

அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்

news

பாஜக தேசிய நிர்வாகிகள் மாற்றம்: 65 பேருக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு

news

சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!

news

கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்

news

வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்

news

ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம்!

news

Monday Motivation: அலட்சியம் தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்