"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

Aug 19, 2026,11:08 AM IST

- கலைவாணி கோபால்


திருவாரூரை அடைந்த திருநாவுக்கரச பெருமான். ஒரு சைவத்தொண்டராக, தீட்சை பெற்ற தொண்டனாக, புனிதமிகு ஆலையத்தில் நுழைந்த போது, வான்மீகிநாதர் எனும் தியாகேசர் உலா எழுந்தருளி இருந்ததை கண்டு... தனக்காக, பெருமானே! வந்ததாக கருதி, மனம் உருகி, "பாடிளம் பூதத்தினாலும் பவளச் செவ்வாய் வண்ணத்த தானும்" என்னும் பதிகம் பாடி மகிழ்ந்தார். 


பின் ஆரூர் பெருமானை தரிசித்தும் பின், அங்கு உள்ள எல்லா ஆலயங்களிலும் தான் செய்யும் திருப்பணியினை  செய்தார். சில நாட்கள் கழித்து ஆரூரிலிருந்து நீங்கி, திருப்புகலூர் என்னும் திருத்தலம் சென்றார்.


முருக நாயனாரின் மடம் திருப்புகலூரில் தான் உள்ளது. அம்மடம்... திருநீலநக்க நாயனார், சம்பந்தப் பிள்ளை, முருக நாயனார் என எல்லோரும் சந்தித்து தங்கிய மடம். அப்போது அங்கு தங்கியிருந்த சம்பந்தப்பிள்ளை திருநாவுக்கரச பெருமான், வருவதை அறிந்து எதிர்கொண்டு அவரை அழைத்தார். இருவரும் சிவன் புகழைப் பாடியபடியே, மடத்தில் சில காலம் தங்கி இருந்தனர்.


அம்மடத்தில் தங்கி இருந்தபோது.. சம்பந்தபிள்ளையிடம், ஆரூரில் நடந்த சில அனுபவங்களை நாவுக்கரசர் பகிர்ந்து கொண்டு இருந்தார். அந்த அனுபவத்தை....... "முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே"எனும் பதிகம் பாடி.. தேனின் சுவை, தினைமாவோடு கலப்பது போல, அதைக் கேட்டு சம்பந்தருக்கும் திருவாரூர் செல்ல ஆசை பிறந்தது.


சம்பந்தரை அழைத்துக்கொண்டு திருவாரூர் சென்றார் திருநாவுக்கரசர். பழுத்த அடியார் ஆன அப்பருடன் தான் சம்பந்தப்பிள்ளை . ஆரூ ராரை , தரிசிக்க வேண்டும். என்பது பெருமானின் எண்ணம் போல; இருவரும், மனதார ஆரூர் நாதனை தரிசித்த பின்  பல பாடல்களை பாடி தொழுதார்கள். அங்கும், சில காலம் தங்கி இருந்து உழவார  பணியும் செய்தார் அப்பர் சுவாமிகள். பாமாலை சூடியும், உழவாரப்பணி செய்வதும், என தொண்டுகள் செய்த இருவரும் பின்பு, திருப்புகலூர் திரும்பினார்கள்.




திருப்புகலூர் வந்தடைந்த இருவரும்,சம்பந்தப் பெருமான். திருநாவுக்கரசரை, பிரிய மனம் இல்லாமல், முருக நாயனார் மடத்திலிருந்து நீங்கி.... திருவீழிமிழலை நோக்கிச்  சென்றனர். திருவீழிமிழலை வரும் வழியில், இருவரும் திருக்கடவூர் திருத்தலத்துக்கு வந்து, குங்கிலிய கலய நாயனாரின் மடத்தில் தங்கியபடியே, திருக்கடவூர்நாதனை பாடி மகிழ்ந்தார்கள் .. அங்கு தான் "என் கடன் பணி செய்து கிடப்பதே "எனும் 'முத்தாய்ப்பான வரி'  அப்பரால் அருளப்பட்டது. அதன்பின் திருவீழிமிழலை திருத்தலத்தை  இருவரும் வந்தடைந்தனர். 


அங்கு, அவர்கள் வந்து தங்கிய நாட்களில் பெரும் பஞ்சம் உண்டாயிற்று! அந்த பஞ்சம் (புகழ்துணை நாயனார்) காலத்தில் வந்தது போன்று இருந்தது. திருநாவுக்கரசரரும், தங்களை நாடி வரும் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும், உணவு கொடுக்க முடியாமல் தவித்தனர்.


திருவிழிமிழலை வீழி நாதேஸ்வரர் கோயிலின் அன்றாட வழிபாட்டுக்கும், அது, ஆபத்தாக வந்தது. வேறு வேலைக்கு செல்ல முடியாத நிலையில், பச்சிளம் பாலகனும், அவனோடு வயது முதிர்ந்த முதியவருமான அப்பர் பெருமானும் சிவனிடம் கையேந்தி நின்றனர்.


அப்பர் பெருமான் மனம் உருகி வேண்டிக்கொள்ள இருவருக்கும் ,கிழக்கு மற்றும் மேற்கு பீடங்களில் தினமும் ஒரு பொற்காசு வைப்பதாக பெருமான் கனவில் உறுதி அளித்தார் .அவ்வாறே, அனுதினமும் கிழக்கு வாசலில் சுத்தமான தங்க காசை திருநாவுக்கரசருக்கும், மேற்கு வாசலில் சம்பந்தருக்கும் ,மாசு அடைந்த தங்க காசும் வழங்கப்பட்டது .


அப்பர் பெருமானுக்கு கொடுக்கப்பட்டது பசும்பொன் காசு. ஏனெனில் ,அவர் உழவாரப்பணி செய்து அவர் கைகள் தோய்ந்து இருந்தன. சம்பந்த பிள்ளைக்கு கொடுக்கப்பட்டதோ! மாசடைந்த காசு .அதை தினமும் அவர் பட்டை தீட்ட வேண்டி இருந்தது. காரணம் என்னவென்று சிந்தித்தார் ..சம்பந்தப் பிள்ளை. சிறுபிள்ளை ஆனாலும் ,சம்பந்த பிள்ளைக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. தன்னைவிட தன் பக்தனை சிவன் மிக நெருக்கமாக கண்காணிக்கிறான் என்பதை உணர்ந்த சம்பந்தர் மெல்ல புன்னகைத்து மன்னிப்பு கேட்டு பாடினார்.


ஏன் மன்னிப்பு என்றால்? எதற்கு இருவருக்கும் வேறுபட்ட காசு என்பதை ஒரு நொடி சிந்தித்ததாலேயே. அவர் பெருமானிடம் மன்னிப்பு கோரி  பாடினார். அன்றிலிருந்து அவருக்கும் தூய்மையான பொற்காசே கிடைத்தது.


இருவரும் பொற்காசியினை கடை தெருவினில்  விற்று, அடியார்கள் பசியை போக்கினர் ஆலய வழிபடும் சிறப்பாக நடந்தது. இப்படி, சிவனால் பொற்காசுகள் பெற்று திருவீழிமிழலை தலத்தில் கொடிய பஞ்சத்தை எதிர்கொண்டு தங்களையும், தங்களை சுற்றி நின்ற அடியார்களையும் காத்துக் கொண்டார்கள். பஞ்சகாலமும் நீங்கிற்று.... அதன் பின் படிக்காசு வர வேண்டிய அவசியமும் இல்லை.


மனம் குளிர்ந்த இருவரும், அடுத்ததாக.. திருவாஞ்சியம் தலத்தில் உள்ள சிவனை தரிசித்து விட்டு ,மனதார புறப்பட்டனர். அங்கிருந்து, திருமறைக் காட்டுக்குச் சென்றனர். (திருமறைக்காடு என்பது இப்போதைய வேதாரண்யம்) அங்கும், ஒரு விசித்திரம் நடந்தது.


கலியுகத்துக்கு முன்பு வேதங்கள் அங்கு' நாலு வேதபதி' எனும் இடத்தில் இருந்து சிவனை மனதார பாடிக் கொண்டிருந்தன. விரைவில், கலியுகம் பிறப்பதை அறிந்த அந்த வேதங்கள் கதவை தாழிட்டு சென்றுவிட்டன. வேதங்கள் அடைத்த கதவினை வேதங்களாலே திறக்க முடியும் என்பதால், அந்தக் கதவு திறக்கப்படாமலே பக்கவாட்டிலேயே மக்கள் ஆலயம் சென்று வந்தனர்.


கதவு அடைப்பட்டு கிடப்பதைக் கண்ட சம்பந்தரும், திருநாவுக்கரசரும் என்ன செய்வது என்று யோசித்தனர். அப்போது, முதல் வாசல் திறக்கும்படி சம்பந்தப் பிள்ளை ..அப்பர் பெருமானிடம் வேண்டினார். அதற்கு இணங்கி அப்பரும், "பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ"என்னும் பதிகம் பாடி அதாவது 10 பாடல்களையும் அப்பர் பெருமான் பாடி முடித்த பின்னரே, அக்கதவானது திறந்து வழி விட்டது.


திறந்த கதவு மீண்டும் அடைத்து பார்த்தால் அது அடைபடவில்லை! என்ன செய்வது? என்று யோசித்தபோது, சம்பந்த பெருமான் "சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்"என்று சம்பந்தர் முதல் பாடலை பாடியதுமே' ஆலைய கதவு அடைப்பட்டு விட்டது. பின் திறப்பதும், பூட்டுவதும் எளிதாயிற்று .அப்பர் பாடலை முழுமையாக பாடிய போது மட்டுமே, திறந்த கதவு? சம்பந்தரின் முதல் ப பாடல் பாடிக் கொண்டிருந்தபோததே அடைப்பட்டு விட்டது.


அப்பர் பெருமானுக்கு, நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமோ? சம்பந்தப் பிள்ளை ஒரு பாட்டிலே கதவை அடைத்து விட்டார். நாமோ? பத்து பாடல்களை பாடிய போது மட்டுமே கதவு திறந்தது. என்று மனதுக்குள் வருத்தம் வர அப்போது அடியார் வடிவில் வந்த சிவன். அவரை திருவாய்மூர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். அழைத்து வந்தது சிவன் என உணர்ந்து அப்படியே மெய் மறந்து நின்றார் அப்பர்.


அங்கு, வேதாரண்யம் மடத்தில் அப்பரை காணாமல் துடித்த சம்மந்தர் .அவரை தேடி தேடி அலைந்து ஒருவாறு திருவாய்மூர் ஆலயம் அடைந்து அப்பரை சந்தித்தார். தான் சிவனை கண்டது போல ;சம்பந்தம் காணட்டும் என சிவனே! "நான் அருளிய திருப்பதிகத்தில் திறக்க பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்ப்பாடி திருக்கதவம் அடைபித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்கும்" என வேண்டினார்.


அவர் சொல்லியதில் என் தவறை சரி செய்த சம்பந்தர் எனும் பொருளும் அதில் இருந்தது .அதனால், சிவனோ சம்மந்தர்க்கு மட்டும் தன்னை காண்பித்தார். அப்பர் கண்களுக்கு அவர் தெரியவில்லை. சம்பந்தர் சிவனை நினைத்து, "தளிரிள வளரென உமைபாடத்" இன்னும் பதிகம் பாட அப்பருக்கு தரிசனம் கிடைத்தது.


திருவாய்மூரில் சிவனை நேரடியாக தரிசனம் செய்த இருவரும் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர் .சம்பந்தர் பெருமான் மூலம் தனக்கு ஆலய திருக்காட்சி சாத்தியம் .என உணர்ந்த அப்பர் சுவாமிகள். அவர் மேல் தனி ப்ரியமும் மரியாதையையும் கொண்டு அவரை ஒரு அவதாரமாய் ஏற்றுக் கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

news

Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

news

அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

news

"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்

news

21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

news

Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!

news

விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!

news

Short Story: ரிசர்வ் பெட்டியில் ஒரு அன்ரிசர்வ் கலாட்டா!

அதிகம் பார்க்கும் செய்திகள்