விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!

Aug 18, 2026,12:58 PM IST

பராபவ வருடம் 20 26 ஆகஸ்ட் மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமையான இன்று ஆவணி மாதம் முதல் நாள் பிறந்துள்ளது. மங்கள வாரம் என்னும் செவ்வாய்க்கிழமையில் பிறந்துள்ளது அதீத சிறப்பு.


தமிழ் நாட்காட்டியில் ஐந்தாவது மாதமாக வரும் ஆவணி மாதம் ஆன்மிக சிறப்புகள், விழாக்கள் மற்றும் முக்கியமான பண்டிகைகள் நிறைந்த ஒரு மங்கலமான மாதமாகும்.


முக்கிய பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் :


முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமியும் இமாதத்தில் மிகச் சிறந்த விழாவாகும். கேரளாவில் ஆவணி மாதம் மலையாள புத்தாண்டாகவும், திருவோண பண்டிகையாகவும் சிறப்பிக்கப்படுகிறது. மேலும் மகா சங்கடஹர சதுர்த்தி,ஓணம் பண்டிகை, ஆவணி மூலம்,ஆவணி அவிட்டம், ஆவணி ஞாயிறு, புத்தரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் இம்மாதத்தில் வருவது சிறப்பு.




ஆவணி மாதம் முதல் வாரத்திலேயே வரலட்சுமி விரதம் அமைந்துள்ளது. விவசாய பணிகள், வீடு கிரகப்பிரவேசம், வீடு கட்ட தொடங்க  மற்றும் திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடங்க ஆவணி மாதம் மிகவும் உகந்தது.


ஆவணி மாதம் சிங்க மாதம் என்றும் மாதங்களின் அரசன் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது.


ஆடி போய் ஆவணி வந்தா பையன் டாப்பா வருவான் என்று ஹாசியமாக கூறுவார்கள். அந்த அளவிற்கு அளவிற்கு ஆவணி மாதம் சிறப்புமிக்க மாதமாகும்.


ஆவணி மாதம் வரும் விசேஷ நாட்கள் பண்டிகைகள் மற்றும் விரத நாட்கள்:


ஆவணி 1  -ஆகஸ்ட் 18 செவ்வாய் வளர்பிறை சஷ்டி விரதம்.

ஆவணி 2   - ஆகஸ்ட் 19   அஷ்டமி திதி.

ஆவணி 3 - ஆகஸ்ட் 20 நவமி திதி.

ஆவணி 4 - ஆகஸ்ட் 21 வரலட்சுமி விரதம்.

ஆவணி 6 - ஆகஸ்ட் 23 ஏகாதசி விரதம்.

ஆவணி 8 - ஆகஸ்ட் 25 பிரதோஷம்.

ஆவணி 9  -ஆகஸ்ட் 26 ஓணம் பண்டிகை , மிலாடி நபி.

ஆவணி 10  -ஆகஸ்ட் 27 பௌர்ணமி, ஆவணி அவிட்டம்.

ஆவணி 11  -ஆகஸ்ட் 28 ரக்ஷா பந்தன். ( ராக்கி பண்டிகை ).

ஆவணி 16   - செப்டம்பர் 2 சஷ்டி விரதம் (தேய்பிறை).

ஆவணி 17  -செப்டம்பர் 3 கிருத்திகை விரதம்.

ஆவணி 18- செப்டம்பர் 4 கோகுலாஷ்டமி.

ஆவணி 19  -செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்.

ஆவணி 21 -செப்டம்பர் 7 ஏகாதசி விரதம்.

ஆவணி 22  -செப்டம்பர் 8 பிரதோஷம்.

ஆவணி 23  -செப்டம்பர் 9 மாத சிவராத்திரி.

ஆவணி 24  - செப்டம்பர் 10 அமாவாசை திதி.

ஆவணி 28  -செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தி.

ஆவணி 31 -செப்டம்பர் 17 சஷ்டி விரதம்.


ஆவணி மாதம் முழுவதும் அனைவரும் அருட்பேராற்றல் அருளால் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று வாழ்வோமாக. மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.

எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்