சின்ன சின்ன பதம் வைத்து கண்ணன் வந்தான்!
- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணன் வந்தான் ......
செம்பவழ வாய் மலர்ந்து
செம்மொழியில் குழல்
ஊதினான்
அசைந்து வரும்
தேரினிலே......
கள்ளழகன் வந்தான்
துள்ளி வரும் அவன்
அழகோ அழகு.....
முதுவேனிற் காலம்
புது மழைக் காலம்
கருநிற முகில்கள்
கருக் கொண்ட நீரை
பனிக் குடம் உடைத்து
தணிக்கும் தாமோதரன்
சோனை ஆன சேனை
ஆனை போலும் அழிக்கும் கண்ணன்
பாதம் குளிரும்
தேகம் தளரும்
மாதவன்
தன்னைக் கவர்ச்சியாக்கி
மண்ணை மலர்ச்சியாக்கும் மாலவன்..!
ஆழ்வார் நாவிலே ஹரிநாமம்
ஒவ்வொரு நிமிடமும் ஹரிநாமம்
அல்லலற்று அகம் மகிழ்ந்திடுவோம் ஆராவமுதனுடனே
பஞ்சமியிலே அலர்மேல் மங்கையை பாடிடுவோம்
பாரோர் வாழவே வழிபடுவோம்
வள்ளல் பெருஞ்தேவி தாயாரையே
தனம் தந்து தாங்கிடுவாள் தரணிநாயகி
மனம் கவர்ந்த மணவாளனுடன்
மண்ணும் விண்ணும் மலர்ந்திடவே...!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)