- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
கிங்கினி நாதம் கல்கல் என ஒலித்திட கண்ணன் நடந்திடுவான்
சாயகொண்டை அசைய மகரகுண்டலம் மின்னிட வந்திடுவான்
பன்னொன்று வேன்குழல் ஊதியே உள்ளம் பரவசமாக்கிடுவான்
இந்த மண்ணில் யாவரும் மயங்கியே உள்ளம் நர்த்தனம் புரிந்திடுவான்
கோவிந்த க்ருஷ்ணா கோபால கிருஷ்ண கோவிந்த கோவிந்த கோபால கிருஷ்ணா
கோவிந்த ராதே கோபால ராதே கோவிந்த கோவிந்த கோபால ராதே.
--

பூவிரித்த
சோலைதனில்
பூத்த
புது மலரே...
காவிரித்த
கானகத்தில்
வாழும்
வனமலரே...
தேவிரித்த
மலர் மகளே
ஆகத்தின்
இணைமலரே
பாவிரித்துப்
பாடுகிறோம்
ஏற்றருள்வாய்
பதமலரே
--
இருள்தரும் மாகடலிலே ஒளிதரும் ஓம்காரமே!
ஓய்வில்லா அலைகடலாக.. அடியோங்களின் ஆத்மா நாரணனுக்கே உரியதென உய்யவழிக்கற்பிக்கும் உயரிய செம்பொருளே கலியுக காரிமாறனே!
தலையல்லால் கைமாறறியேன் அடியேன்
ஓம்ஹரி ஸ்ரீ ஹரி நரஹரி முரஹரி முகுந்தமுராரே
கோபாலஹரி கோவிந்தஹரி கோகுலஹரி கோவில்வாழம் கோபாலகோளரி அடியார்கள் மனமதிலே ஹரி நீ நீங்காமல் நிறைந்தாயே ஹரி
--
இளங்கண்ணன்
இளந்தயிர்
இளம் வெண்ணெய் களவாடி
இளமாயரிடம் மத்தடிபட்டு இளங்கோபியருடன்
இராசலீலை புரிந்து
இன்முகம் காட்டி
இடைச்சியர் இதயம் இலகுவாக கவர்ந்த இடையன் இவனொருவனே
இளஞ்சிங்க இளவல் இராமன்
--
செங்கமலபோதகத்தின் கோலமுத்தம் வேண்டினாற்போல்
அணிகொள் முகம் வியர்ப்ப குறும்புசெய்து நிலாமுற்றத்தூடே
திருமேனி தூசுபடர்ந்து திரியவேண்டா அம்மவிம்ம வானவர்க்கு அமுதளித்த தேவத்தலைவா முலையுணாயே
--
ஓடியாடி வருகிறான் ஓம்காரனே
பாடிப்பாடி வருகின்றான் பத்பநாபன்
ஆடியாடி வருகின்றான் ஆராவமுதன்
அசைந்துசைந்து வருகிறான் கலிவரதனே
வரமருளவே வருகிறான் பெருஞ்தேவியுடன் வரதன்
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
எனை வார்த்தெடுத்த என் பள்ளிக்கூடமே!
கிங்கினி நாதம் கல்கல் என ஒலித்திட கண்ணன் நடந்திடுவான்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 26, 2025... இன்று நினைத்தது கைகூட போகும் ராசிகள்
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?
தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
{{comments.comment}}