- ஸ்வர்ணலட்சுமி
விசுவாசு வருடம் 20 25 நவம்பர் மாதம் 25ஆம் நாள் செவ்வாய்க்கிழமையான இன்று அயோத்தி ராமர் கோவிலில், பிரம்மாண்டமான "காவிக்கொடி " பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஏற்றப்படுகிறது.
இந்த கொடியேற்றுதல் விழாவிற்கு "தர்மதுவ ஜா ரோஹ ணம் " என்று அழைக்கப்படுகிறது.
இந்த காவி கொடியானது குஜராத் மாநிலத்தில் தயாரிக்கப் பட்டது. ராமபிரான் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் "சூரிய சின்னம்", "ஓம்" மற்றும் புனிதமான கோவிதார மரத்தின் சின்னங்கள் இந்த காவி கொடியில் இடம்பெற்றுள்ளன. இன்று பிற்பகல் 12 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் ஸ்ரீராம் ஜன்ம பூமி கோயில் சிகரத்தின் உச்சியில் 10 அடிக்கு 20 அடி அளவு கொண்ட பிரம்மாண்டமான காவி கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்வு நடைபெறகிறது.

கோவில் கோபுரத்தில் கொடியை ஏற்றுவது வெறும் சடங்கு மட்டுமல்ல சனாதன பாரம்பரியத்தில் மிகவும் புனிதமான செயல். கொடி என்பது தெய்வத்தின் அடையாள இருப்பிடமாக கருதப்படுகிறது. கொடி என்பது தெய்வீக இருப்பு சக்தி மற்றும் பாதுகாப்பை குறிக்கிறது. அயோத்தி ராமர் கோவிலில் 161 அடி உயரம் கொண்ட கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கொடி ஏற்றும் விழா நடைபெறும் என கோவில் கட்டுமான குழுவின் தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் இன்று நவம்பர் 25ஆம் தேதி ராம் லல்லாவை தரிசிக்க இயலாது என்றும் விஐபி இயக்கத்தை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலின் அமைப்பு:
கோவிலின் பிரதான கோபுரம் 161 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அதன் மேல் 30 அடி கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. ஆகையால் கொடி தரையில் இருந்து 191 அடி உயரத்தில் ஏற்றப்படும். இந்த காவிகொடியானது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அயோத்தியின் பாரம்பரியம் சூரிய வம்சம் மற்றும் இராமாயணத்தின் ஆன்மீக அடையாளங்களை இணைக்கும் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலின் சுவர்களில் வால்மீகி ராமாயணத்தில் இருந்து 87 காட்சிகள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சுவர்கள் முழுவதும் இந்திய கலாச்சாரத்தை குறிக்கும் 79 வெண்கல சிற்பங்கள் பதிக்கப்பட்டுள்ளது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.
ராமர் கோவிலில் கொடியேற்றத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கு சூழ்ந்திருப்போர் மத்தியில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஓம் ஜெய் ஸ்ரீ ராம் "
"ஓம் ஜெய் ஸ்ரீ ராம்"
"ஓம் ஜெய் ஸ்ரீ ராம் "...
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
Today Gold Silver Rate:நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று உயர்வு... அதுவும் சவரனுக்கு ரூ.1,600!
அயோத்தி ராமர் கோவிலில் தர்மதுவ ஜா ரோஹணம்!
அயோத்தியில் கோலாகலம்.. ராமர் கோவில் கோபுரத்தில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
தென் மாவட்டங்களில் கன மழை.. சார் பணிகள் பாதிப்பு.. மக்கள் அவதி
சிந்திக்க வேண்டிய விஷயம்....!
அறிவுக்கு வேலை கொடு (சிறுகதை)
{{comments.comment}}