மாட்டுக் கொட்டிலில் ஜனனம்.. வைக்கோல் தொட்டிலில் வாசம்!
Dec 25, 2025,12:54 PM IST
- கலைவாணி ராமு
மாட்டு கொட்டிலில்
ஜனனம் செய்து....
வைக்கோல்
தொட்டிலில்
வாசம்
செய்து.....
மேய்ப்பரிடம்
தன் பிறப்பை
அறிவிக்க
செய்து....
விண்மீன்கள்
வழிகாட்ட...
ஞானிகள் பலரும் வந்து பார்க்க
செய்து...
கன்னி மரியாளை
இறைவனின்
தாய் என
உலகை அறியச் செய்து....
தூய ஆவியால்
உருவானவரே.......
கன்னி மரியாளின்
கருவானவரே......
தாவீது குலம்
வந்து மீட்பவரே...
எங்களின் பாவங்களை வந்து காப்பவரே....
எங்களின்
இறை தூதரே
இயேசுவே .....
உன் பிறந்த நாளான இன்று
உன்னை ஜெபிக்கிறேன்....
கஷ்டங்கள்
தீர்ப்பவரே
கர்த்தரே....
காட்டியவரே.....
பகைவனுக்கும் அருள் செய்யும்
உம் குணம் கொண்டு.... பாரினில் வாழ்வோம்...
பரலோகத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதா வழிப்படி..
என்றென்றும்!