சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்: 10 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் வானிலை மையம் எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Oct 20, 2026,03:02 PM IST

சென்னை:தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை அடுத்து, கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (20.10.2026) தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுத்துள்ளது.   


ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது:   

சென்னை   

திருவள்ளூர்   

செங்கல்பட்டு   

கடலூர்   

விழுப்புரம்   

தஞ்சாவூர்   

திருவாரூர்   

நாகப்பட்டினம்   

மயிலாடுதுறை   

ராமநாதபுரம்   


11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ வரை மழை பொழிவு:




மேற்கண்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 11.5 சென்டிமீட்டர் முதல் 20.4 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.


போக்குவரத்து பாதிப்பு & முன்னெச்சரிக்கை:


தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காலை நேரத்திலேயே மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தாழ்வான இடங்களில் நீர் தேங்குவதை தவிர்க்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.   


பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என்றும், நீர்நிலைகளின் அருகில் செல்வதை தவிர்க்கும் மாறும் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மேலும், மீனவர்கள் வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.