வா.. மீண்டும் ஒருமுறை நனைந்து பார்ப்போம்!

Su.tha Arivalagan
Dec 01, 2025,09:49 AM IST

- மரிய ஜோசப்


பனிக் காலத்திலும்

மழை பெய்கிறது

நீயும் நானும்

நனைவதற்காக...


நனைதல் சுகமென்று

சொல்லிக் கொடுத்தது

நீ தானே...

வா...மீண்டுமொருமுறை

நனைந்து பாா்ப்போம்...




அது மட்டும் தானா...


மழை பாா்த்தல்

மழை தேனீா்

மழை கதைத்தல்

மழையணைப்பு

மழை தூக்கம்

இன்னும்

மழை வகைகள் உண்டு தானே...


நீயற்ற மழை நாட்களை

பிடிப்பதேயில்லை


நாம் நடந்த பாதையில்

மழை உதிா்த்த பூக்களுக்கும்

மௌனமாய் இரங்கல் கூட்டம்

உன்னாலானது...


இங்கு மழை பெய்கிறது

அங்கு மழை பெய்கிறதாவென

நீ கேட்கும் பொழுதெல்லாம்

மழையில்லாமலும்

நனைந்து கொள்கிறேன்...!